Wednesday, 7 August 2019

லடாக்கின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜம்யங் செரிங் நேம்ஜியலின் நாடாளுமன்ற உரை


சிறப்புக் கட்டுரை

காஷ்மீரில் 370ம் பிரிவு திரும்பப் பெறப்பட்டது. அதை வரவேற்று நாடாளுமன்றத்தில் லடாக்கின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜம்யங் செரிங் நேம்ஜியல் (Jamyang Tsering Namgyal Namgyal) 6-ஆகஸ்ட்-2019 அன்று ஆற்றிய உரை:

(Photo credit: LiveMint)

"பண்டிட் ஜவாஹர்லால் நேருவின் தவறான முடிவினால் நேர்ந்த பிழையை இன்றைய அரசாங்கம் சரிசெய்துள்ளது. அதை நாங்கள் வரவேற்கிறோம். இங்கே பேசிய பலரும் லடாக்கிலே, கார்கிலிலே என்று பேசிக்கொண்டிருந்தார்கள். ஆனால் அவர்களுக்கெல்லாம் லடாக் என்றால் என்னவென்று தெரியுமா? கார்கில் என்றால் என்ன என்று தெரியுமா? இவற்றின் முழு விவரம் தெரியுமா?

இப்படிப் பேசிய பலரும் லடாக்கைத் தூக்கி ஓரமாகப் போட்டிருந்தார்கள். அங்கே உண்மையில் என்ன நடந்தது, என்ன நடக்கிறது என்று கொஞ்சம் கூடக் கவலைப்படவில்லை. இதே நாடாளுமன்றத்தில், லடாக்கில் புல் கூட முளைப்பதில்லை என்று சொல்லிக்கொண்டிருந்தார்கள். லடாக்கின் மொழி, உணவு, கலாசாரம், வேலைவாய்ப்பு, வாழ்க்கை முறை எல்லாம் அவர்களுக்குத் தெரியுமா? லடாக்கைக் குறித்துப் பேசிய அவை உறுப்பினர்களில் எத்தனை பேர் நேரில் லடாக்கை பார்த்திருக்கிறார்கள்? அவர்களுக்குத் தெரிந்த லடாக்கெல்லாம் புத்தகங்களில் வாசித்த லடாக் மட்டுமே.

லடாக் கடந்த 71 வருடங்களாக யூனியன் பிரதேசமாக மாற போராடிக்கொண்டிருக்கிறது. 1948ல் உருவான லடாக் ஜனசங்கத்தின் தலைவர், நேருவிடம் லடாக்கை, தனி யூனியன் பிரதேசமாக மாற்ற கோரிக்கை வைத்தார். அந்த கோரிக்கையில் லடாக்கை யூனியன் பிரதேசமாக மாற்றுங்கள் அல்லது இந்தியாவின் இதர பகுதிகளோடு இணையுங்கள்; ஆனால் ஜம்மு காஷ்மீரோடு மட்டும் இணைத்து விடாதீர்கள் என்று கோரியிருந்தார். அன்றைய நேரு அரசாங்கம் எங்கள் கோரிக்கையை ஏற்றுக்கொள்ளவில்லை என்பது மட்டுமல்ல, அதைப்பற்றி யோசிக்கக்கூட தயாராக இல்லை.

காஷ்மீரத்தோடு சேர்த்ததால்தான் எங்கள் மொழி, வாழ்க்கை, கலாசாரம், வளர்ச்சி எல்லாம் தடைபட்டுப்போனது. பெரு மரியாதைக்குரிய டாக்டர் ஷ்யாமா பிரசாத் முகர்ஜி, ஜம்மு காஷ்மீருக்குத் தனி அந்தஸ்து கொடுப்பதை எதிர்த்ததோடு, லடாக் ஜம்மு காஷ்மீரோடு இணைக்கப்படக்கூடாதென்றும் போராடினார். அவரை நாங்கள் இன்று நன்றியோடு நினைவுகூர்கிறோம்.

இன்னொன்றையும் மறந்துவிடாதீர்கள். பாகிஸ்தானோடு நடந்த அனைத்துப் போர்களிலும் லடாக் தனது பங்களிப்பையும் பலிதானத்தையும் இந்திய நாட்டிற்காக வழங்கியுள்ளது. 1948, 1972 மற்றும் 1999 வருடங்களில் நடந்த அனைத்துப் போர்களிலும் லடாக் மக்கள் தங்கள் இன்னுயிரை அளித்திருக்கிறார்கள். இதற்குக் காரணம் லடாக்கியர்கள் இந்தியாவைத்தான் தனது நாடாகக் கருதினார்கள். தங்களை இந்தியர்களாகத்தான் கருதினார்கள். இந்தியாவுக்கே தங்கள் வாழ்வையும் சாவையும் அர்ப்பணிக்க ஆசைப்பட்டார்கள். ஆனால் எங்கள் விருப்பத்திற்கு மாறாக வலுக்கட்டாயமாக ஜம்மு காஷ்மீரோடு இணைக்கப்பட்டோம்.

மரியாதைக்குரிய காஷ்மீரைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர், சட்டப்பிரிவு 370 மற்றும் 35 ஏ இவற்றை நீக்குவதால் என்னாகிவிடும் என்று கேட்டார். இதற்கு என்னுடைய பதில், இந்தச் சட்ட பிரிவுகள் நீக்கத்தால் மக்களுக்குச் சேரவேண்டிய பணத்தை, இரு குடும்பங்கள் மட்டுமே பிடுங்கித் தின்பது நிற்கும். மற்றும் ஜம்மு, காஷ்மீர், லடாக் ஆகியவை வளர்ச்சி பெறும். அதே உறுப்பினர்கள் இனி கார்கில் என்ன ஆகும் என்றெல்லாம் கவலை தெரிவித்தனர். ஆனால் கார்கிலின் 70% மக்கள் யூனியன் பிரதேசமாக ஆவதை முழு மனதுடன் வரவேற்கிறார்கள். 2014 தேர்தல் அறிக்கையிலேயே யூனியன் பிரதேசமாக மாற்றுவதை சேர்க்கச் சொல்லியிருந்தோம். 2019 தேர்தல் அறிக்கையிலும் இதே கோரிக்கையைச் சேர்க்க வைத்தோம்.

கார்கில் மற்றும் லடாக்கின் ஒவ்வொரு கிராமத்தின் ஒவ்வொரு வீடுகளிலும் (பெளத்தர்கள், கிறித்தவர்கள், இஸ்லாமியர்கள் என்ற பாகுபாடில்லாமல் அனைவரிடமும்) சென்று யூனியன் பிரதேசமாக ஆவதின் அவசியத்தையும், நன்மையையும் எடுத்துச் சொல்லியிருந்தோம். அவர்கள் அனைவரும் ஒருமனதாகவும் முழுமனதாகவும் இதுவரை லடாக் பகுதியிலிருந்து தேர்வான பாராளுமன்ற உறுப்பினர்களைக் காட்டிலும் அதிகபட்ச வாக்குவித்தியாசத்தில் என்னை அவைக்கு அனுப்பிவைத்துள்ளனர். மக்கள் பாரதப் பிரதமர் திரு. மோதியை முழுமையாய் நம்பினார்கள். இந்தத் தனி யூனியன் பிரதேசத்து அறிவிப்பை முழுமனதுடன் வரவேற்கின்றனர்.

கார்கிலைப் பற்றிப் பேசும் அவை உறுப்பினர்களுக்கு கார்கிலைப் பற்றி என்ன தெரியும்? நாடாளுமன்ற கூட்டுக் குழு ஜம்மு மற்றும் காஷ்மீருக்குச் சென்றனர். மதிப்பிற்குரிய உள்துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் லே வந்திருந்தார். அப்போது அவர் கேட்ட ‘உங்களுக்கு என்ன வேண்டும்?’ என்ற கேள்விக்கு, லடாக்கைத் தனி யூனியன் பிரதேசமாக மாற்றுங்கள் என்பதே எங்கள் கோரிக்கையாக இருந்தது. வேறு என்ன வேண்டும் என்ற கேள்விக்கு, ‘லடாக்கைத் தனி யுனியன் பிரதேசமாக மாற்றுவது மட்டுமே எங்கள் கோரிக்கை; வேறு எதுவும் வேண்டாம்’ என்றோம். லடாக்கின் அனைத்து மத அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சிகள் அனைவரும் ஒரே குரலில் லடாக்கைத் தனி யூனியன் பிரதேசமாக ஆக்க கையெழுத்திட்டு மனு அளித்தோம். இந்த மனுவில் காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளும் கையெழுத்திட்டிருந்தன. ஆனால் ஜனநாயகம் பேசும் காங்கிரஸ் என்ன செய்தது? அம் மனுவில் கையெழுத்திட்ட காங்கிரஸ் தலைவர்களை உடனடியாக கட்சியிலிருந்து நீக்குவதாக அறிவிப்பு வெளியிட்டது. இதுதானா உங்கள் ஜனநாயகம்? இதுதானா உங்கள் பேச்சுரிமை?

நேற்று (5-8-2019) காலை 11 மணியிலிருந்து சபை உறுப்பினர்கள் பேசுவதைக் கேட்டுக்கொண்டிருக்கிறேன். இந்த சட்டப்பிரிவுகளை நீக்குவதால் காஷ்மீர மக்களின் நிலைமை என்னாகும், அவர்களின் உரிமை என்னாகும் எனத் தொண்டை கிழிய கத்திக்கொண்டிருந்தனர். இந்த அவை மூலமாக அப்படிப் பேசுபவர்களைப் பார்த்துக் கேட்கிறேன். அவர்கள் மூலமாய் ஜம்மு காஷ்மீரத்தை ஆட்சி செய்பவர்களைப் பார்த்துக் கேட்கிறேன். இந்திய அரசாங்கத்திடம் இருந்து வரும் பணம் ஜம்மு, காஷ்மீர் மற்றும் லடாக்கிற்கான பணம். ஆனால் நீங்கள் லடாக்கின் வளர்ச்சிக்கு என்ன செய்தீர்கள்? லடாக்கிற்கான பணத்தையும் சேர்த்து காஷ்மீருக்குச் செலவு செய்தீர்கள். இதுவா உங்கள் சம உரிமை?

அடுத்ததாக, ஜம்மு மற்றும் காஷ்மீரத்திற்கு இரு தலைநகரங்கள். குளிர்காலத் தலைநகரம் மற்றும் கோடைகாலத் தலைநகரம். அதில் லடாக்கிற்கான பிரதிநிதித்துவம் என்ன என்பதைப் பாருங்கள். தலைமைச் செயலகத்தில் 1000 வேலை வாய்ப்புகள் உருவாகிறதெனில் காஷ்மீரிகள் எடுத்துக்கொண்டது போக, ஜம்மு மக்கள் சண்டையிட்டுப் போராடிப் பெற்றுக் கொண்டது போக, மீதம் உள்ளதில் எத்தனை இடங்கள் லடாக்கிகளுக்கு தந்தீர்கள். இதுவா உங்கள் சம உரிமை?

திரு அத்னான் என்ற உறுப்பினர் மத்தியப் பல்கலைக்கழகம் குறித்துப் பேசினார். காஷ்மீரிகளுக்கு ஒன்றும், போராடிப் பெற்ற ஜம்மு மக்களுக்கு ஒன்றும் கிடைத்தது. ஆனால் லடாக்கிற்காக, நான் மாணவர்கள் தலைவனாக, அனைத்து மாணவர்களையும் ஒன்றுதிரட்டி தலையில் கருப்புத் துணி கட்டிக்கொண்டு ஒரு பல்கலைக்கழகம் வேண்டுமெனப் போராடினேன். கொடுத்தீர்களா? இதுவா உங்கள் சம உரிமை?

இப்போது லடாக்கின் வளர்ச்சியைப் பற்றிக் கவலைப்படும் காங்கிரஸ் உறுப்பினர்கள், முதலமைச்சராக இருந்தபோது லடாக்கின் வளர்ச்சிக்காக என்ன செய்தீர்கள்? புதிய மாவட்டங்களைப் பிரிக்கும்போதும் பாதி காஷ்மீருக்கும் மீதி ஜம்முவிற்கும் கொடுத்தீர்கள். லடாக்கிற்கு என்ன கொடுத்தீர்கள்? இதுவா உங்கள் சம உரிமை?

வரிவடிவமே இல்லாத காஷ்மீர மொழிக்கு அந்தஸ்து கொடுத்தீர்கள். ஜம்முவின் மொழிக்கும் அந்தஸ்து கொடுத்தீர்கள். ஆனால் வரிவடிவமும், பேச்சு வடிவமும் கொண்ட தனித்துவம் கொண்ட லடாக்கிய மொழிக்கு இன்றுவரை மொழி அந்தஸ்து கொடுக்கவில்லை. இதுவா உங்கள் சம உரிமை?

உறுப்பினர்கள் அனைவரும் மதச்சார்பின்மை, மற்றும் மக்களாட்சி குறித்துப் பேசினார்கள் . அது குறித்தும் நான் பேச விரும்புகிறேன். சட்ட பிரிவு 370 இருக்கும் தைரியத்தில் காஷ்மீரப் பண்டிட்டுகளை இரவோடு இரவாக அடித்து விரட்டினீர்களே, இதுவா உங்கள் மதச்சார்பின்மை? இதுவா உங்கள் சம உரிமை?

அவை உறுப்பினர் ஒருவர் சொல்கிறார், லடாக்கில் இஸ்லாமியர்களின் மக்கள் தொகை அதிகமுள்ளது, அவர்களின் நிலை என்னாகும் எனக் கவலைப்படுகிறார். நான் சொல்கிறேன், இதே சட்டப் பிரிவுகளைத் தவறாகப் பயன்படுத்தித்தான் லடாக்கிய பெளத்தர்களைப் படுகொலை செய்து, திட்டமிட்டே இஸ்லாமியர்களின் எண்ணிக்கை உயரும்படி செய்தீர்கள். இதுவா உங்கள் செக்யூலரிசம்?

இந்த இரு குடும்பங்கள், நான் சொல்கிறேன், அவர்கள் ஆட்சி செலுத்தவில்லை, ராஜாங்கம் நடத்தினார்கள்! இதே குடும்பம், 1979ல், லடாக்கை இரு பகுதிகளாகப் பிரித்தது. பெளத்தர்கள் மெஜாரிட்டியுடன் லே மாவட்டம், இஸ்லாமியர்கள் மெஜாரிட்டியுடன் கார்கில் மாவட்டம் எனப் பிரித்தீர்கள். லடாக்கிய சகோதரர்களுக்குள் சண்டையை மூட்டிவிட்டு வேடிக்கை பார்க்கிறீர்கள். இதுவா உங்கள் சம உரிமை? இதுவா உங்கள் செக்யூலரிசம்?

இங்கு அமர்ந்துகொண்டு கார்கிலில் முழு அடைப்பு எனச் சொல்லிக்கொண்டிருக்கிறீர்கள். உங்களுக்கு யார் சொன்னது கார்கிலில் முழு அடைப்பு என? புரிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள்! நானிருக்கிறேன், லடாக்கிலிருந்து வந்திருக்கிறேன். எந்தப் புத்தகத்தையும் பத்திரிகைகளையும் படித்துவிட்டுப் பேசிக்கொண்டிருக்கவில்லை. கள நிலவரத்தை நான் லடாக்கியனாகப் பேசுகிறேன். நீங்கள் லடாக்கிலிருந்து வரவில்லை. நான் வந்திருக்கிறேன். இதுவரை நீங்கள் பேசி நாங்கள் கேட்டோம். இன்று நாங்கள் பேசுகிறோம், நீங்கள் கேளுங்கள். சௌகரியமாக அமர்ந்து கேளுங்கள்.

இவர்கள் அனைவரும் ஒரு சாலையையும், மார்கெட்டையும் கார்கில் என நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். சகோதரரே, உங்களுக்கு கார்கிலைப் பார்க்க வேண்டுமெனில் சம்ஸ்கர் செல்லுங்கள், வாகா முல்கோட் செல்லுங்கள், ஆர்யன் பள்ளத்தாக்கிற்குச் செல்லுங்கள், த்ஸ்தி கர்கோன்னைப் பாருங்கள். 70 சதவீதப் பகுதிகளும், மக்களும் இந்த முடிவிற்கு வரவேற்பு அளிக்கின்றனர். இந்தச் சட்டத்திருத்தத்திற்கு நன்றி சொல்கின்றனர். கார்கிலில் இன்று நடப்பதாகச் சொல்வதெல்லாம் உண்மையில் நடக்கவில்லை, இங்கிருப்பவர்கள் அங்கே தொலைபேசி மூலம் பேசிச் செய்ய வைக்கின்றனர். அவர்களுக்கே தெரியாது தாம் என்ன செய்துகொண்டிருக்கிறோம் என. கார்கில் மக்கள் தங்கள் நலனைக்குறித்து யோசிக்க வேண்டும், இங்கிருந்து உத்தரவு கொடுப்பவர்களின் பேச்சுக்களைக் கேட்டுக்கொண்டிருக்கக்கூடாது.

ஜன சங்கத்தின் நிறுவனர் டாக்டர் ஷியாமா பிரசாத் முகர்ஜி ஒரு தீர்மானம் எடுத்தார். ஒரு நாட்டில் இரு அரசு, இரு அடையாளங்கள், இரு தலைமைகள் இருத்தல் கூடாது, கூடாது, கூடாது என. இதே சங்கல்பத்துடன் நான் கர்வத்துடன் சொல்கிறேன், இவர்களுக்கே தெரியாது, இதுவரை லடாக்கியர்கள் என்ன செய்திருக்கிறார்கள் என. இவர்கள் இன்றைக்கு ‘எங்கள் கொடி போகிறது’ என ஒப்பாரி வைக்கிறார்கள். சகோதரா, லடாக்கியர்கள் 2011லேயே உங்கள் கொடியை அகற்றிவிட்டோமே, லடாக் ஹில் அட்டோனமஸ் டெவலப்மெண்ட் கவுன்சில் சேர்மன் , கவுன்சிலர், டெப்டி மினிஸ்டர் ஒரு தீர்மானம் செய்து ஜம்மு காஷ்மீர் கொடியை அகற்றிவிட்டு இந்திய மூவர்ணக் கொடியை அல்லவா பயன்படுத்தி வருகிறோம்! ஏனெனில் நாங்கள் இந்தியாவின் பகுதியாகவே இருக்க விரும்புகிறோம். இதுதான் லடாக்.

நான் இரு குடும்பங்களைப் பற்றிப் பேசி வருகிறேன். காஷ்மீரின் கௌரவம் காஷ்மீரின் கௌரவம் என தண்டோரா அடித்துக்கொண்டிருக்கிறார்களே, அவர்கள் சமாதானம் பேசுபவர்களல்ல. அவர்கள்தான் பிரச்சினையே. அந்தப் பிரச்சினை முடிவுக்கு வருகிறது. காஷ்மீர் தனது பாட்டன் சொத்து என்ற திமிரில் அவர்கள் அதிகார போதையிலிருக்கிறார்கள். அப்படி இல்லை, இல்லவே இல்லை.

எனது உரையை முடிக்கும் முன்னர் இந்திய அரசுக்கும், மதிப்பிற்குரிய பாரதப் பிரதமர் நரேந்திர மோதி அவர்களுக்கும், அமித்ஷா ஜி அவர்களுக்கும், மற்றும் இந்தக் கூட்டணியில் இருப்பவர்களுக்கும், கூட்டணியில் இல்லாமல் இந்த சட்டத் திருத்தத்துக்கு ஆதரவு தெரிவிக்கப் போகிறவர்களுக்கும் எனது முழு நன்றியை லடாக்கியர்கள் சார்பாகத் தெரிவிக்க விரும்புகிறேன். ஏனெனில், இந்திய சரித்திரத்தில் முதன்முறையாய் லடாக்கியர்களின் தேவைகளை, எண்ணங்களை இந்த அரசு கேட்கிறது. கார்கிலிலும், சீனத்தை ஒட்டியுள்ள பகுதியிலும் கஷ்டங்களை அனுபவிக்கும் லடாக்கியர்களின் கஷ்டங்களை இந்த அரசு புரிந்துகொள்கிறது.

இந்தச் சட்டத்தை நாங்கள் வரவேற்கிறோம். இதற்குப் பின்னரும் குழப்பத்தில் இருப்பவர்களுக்கு ஒன்று சொல்லிக்கொள்கிறேன். நாட்டின்மீது அன்பிருப்பின் அதை வெளியில் சொல், யாருக்காகவும் காத்திருக்காதே. கர்வத்துடன் சொல் ஜெய் ஹிந்த்! அபிமானத்துடன் சொல், நாங்கள் இந்தியர்கள் என!"

தமிழில் மொழிபெயர்த்தவர்: ஜெயகுமார் ஸ்ரீனிவாசன்

Monday, 1 July 2019

வலம் மே 2019 இதழ் - முழுமையான படைப்புகள்வலம் மே 2019 இதழின் படைப்புகளை இங்கே வாசிக்கலாம்.

சாவர்க்கர் சிறப்பிதழ்

கம்பனில் வேதாந்தம்: ஐந்து மகத்தான உவமைகள் | ஜடாயு

உரிமைக்குரல்: பதிப்புரிமை - சன்மானம் - நாட்டுடைமை | கோ.இ.பச்சையப்பன்

சில பயணங்கள் சில பதிவுகள் – 19 | சுப்பு

ஹிந்து - முஸ்லிம் பிரச்சினை (1924) - பகுதி 1 : லாலா லஜ்பத் ராய் | தமிழில்: கிருஷ்ணன் சுப்பிரமணியன்

வீர் சாவக்கரின் ‘அந்தமான் சிறை அனுபவங்கள்’ புத்தகத்தின் ஆங்கிலப் பதிப்பின் முன்னுரை | தமிழில் SG சூர்யா

மகாத்மா காந்தி கொலைவழக்கு – சாவர்க்கரின் வாக்குமூலம் - பகுதி 1 | தமிழில்: ஜனனி ரமேஷ்

அந்தமானில் இருந்து கடிதங்கள் - 1  | வீர சாவர்க்கர், தமிழில்: VV பாலா

தேவையா இந்துத்துவ அறிவியக்கம்? | அரவிந்தன் நீலகண்டன்

மோகினியின் வளையல்கள் (சிறுகதை) | சத்யானந்தன்

மோகினியின் வளையல்கள் (சிறுகதை) | சத்யானந்தன்


வக்.. வக். வக்..’
சீசரின் குரைப்பு சுசீலாவை எழுப்பியது. படுக்கப் போனதில் இருந்து, இரவு வெகு நேரம் சுசீலா தூங்கவே இல்லை. அவனுடைய அப்பா ஜூரம் என்று இருமல் சிரப்குடித்ததால் அவரும் சிவகுமாரைப் பற்றி விசாரிக்காமலேயே தூங்கிவிட்டார். வீட்டுக்கு வரவே இல்லை.
ஒருமுறை மட்டுமே குரைத்து சீசர் நிறுத்திக்கொண்டது. சுசீலா படபடப்புடன் எழுந்தார். படுக்கை அறைக் கதவை மறக்காமல் மூடிவிட்டு, வரவேற்பறைக்குள் நுழைந்தார். சிவகுமாரின் அறையில் விளக்கெரிந்தது. சீசர் அவனுக்காகதான் குரைத்திருக்கிறது. அவன் அறைக் கதவு பாதி மூடியிருந்தது. எவ்வளவு நேரமாகி வந்திருக்கிறான்? நிமிர்ந்து கடிகாரத்தைப் பார்த்தார் சுசீலா. மூன்று மணி. இத்தனை நேரம் எங்கே போயிருந்தான்? ‘டேய் சிவா, எங்கேடா போயிருந்த? சாப்டியா?’ அவன் அப்பாவை எழுப்பிவிடக் கூடாது என்பதால் தணிந்த குரலில் கேட்டார். பதிலில்லை. அவன் அறைக்கு அருகே வந்தார். அவன் ஒரு பயணப் பெட்டிக்குள் தனது துணி மணிகளை அடுக்கிக் கொண்டிருந்தான். ‘டேய்... என்னடா ஆச்சு உனக்கு? இப்போ என்னத்துக்கு துணி எடுத்து வைக்கிறே?’
ஆபீஸ் வேலையா அர்ஜெண்டா வெளியூர் போகணும்மா...
நீ வேலை பாக்கறது கூரியர் தானே. உள்ளூருல தானே தபாலெல்லாம் தரணும்.
இல்லமா.... கேரளால ஆள் குறைவா இருக்காங்காம்.
கேரளாவா? போயிட்டு வர்ற எத்தனை நாள் ஆவும்?’
ரெண்டு மூணு மாசம் ஆவும்மா.
என்னடா உளர்றே. அப்பாவுக்கு அடிக்கடி உடம்பு சுகம் இல்லாமல் போயிடுது. நீ என்னடான்னா கேரளாவுக்கே போறேன்ற?’
அவன் பெட்டியை மூடி விட்டாலும் வேறு எதையோ அறை முழுவதும் தேடினான். ‘என்னடா தேடற?’ இதற்கும் பதில்லில்லை. ‘என்னடா ஆச்சு உனக்கு?’ அவன் பின்னாடியே சென்று அவன் தோளைத் தொட்டுத் திருப்பினார். அவன் முகம் கலங்கியதுபோல இருந்தது. ‘ஏண்டா முகம் ஒரு மாதிரி இருக்கு?’ ஒரு கணம் அவன் கண்கள் கலங்கின. சுதாரித்துக்கொண்டு, ‘நான் ஆபீஸுக்கு எடுத்துப் போற பெரிய பையைத் தேடறேன்என்று அவனது உடை அலமாரியில், அவன் அறையின் மேஜைக்குக் கீழே, அவனது கட்டிலுக்குக் கீழே எனத் தேடிக்கொண்டே போனான். ‘சாப்டியா?’ மறுபடி பதிலிலில்லை. இப்போது அவன் வரவேற்பறையில் டீபாய்க்குக் கீழே பையைத் தேடிக் கொண்டிருந்தான். அது சற்றே பெரிய பை. அதை எப்படி அந்த இடத்தில் தேடுகிறான் என்று அம்மாவுக்கு விளங்கவில்லை. ‘கருப்புக் கலருதானே அந்த பேக்?’ அவன் பதிலளிக்கவில்லை. பாலைச் சூடு செய்து எடுத்து வரப் போனார். தாமதமாக வருகிறவன்தான். ஆனால் தனது அறையில் உறங்கப் போய் காலையில் மெதுவாகத்தான் எழுந்திருப்பான். மிகவும் தாமதமாக வரும் நாட்களில் அவன் குடித்துவிட்டு வருகிறானா என்னும் சந்தேகமும் சுசீலாவுக்கு உண்டு.
பாலை எடுத்துக்கொண்டு கூடத்துக்கு வரும்போது, அவன் பயணப் பெட்டியுடன் கிளம்பிக் கொண்டிருந்தான். ‘பாலைக் குடிடா. ராத்திரிதானே கேரளா டிரெயினெல்லாம் கிளம்பும்?’ என்றார். ‘தாம்பரத்துல காலையில ஐந்து மணிக்கு வண்டி இருக்கும்மா...’ என்றான். நம்புவதா வேண்டாமா என்று சுசீலாவுக்குப் புரியவில்லை. அப்பா தூங்கும் நேரமாகப் பார்த்துக் கிளம்புகிறான் என்பது தெளிவாகப் புரிந்தது. அவருடைய குறுக்கு விசாரணை இல்லாமல் இவன் தப்பிக்கிறான். அவ்வளவு சூடான பாலை எப்படி விழுங்கினான்? பெட்டியுடன் வெளியே காலை எடுத்து வைத்தான். ‘பணம் இருக்காடா?’
ஆபிசுல அட்வான்ஸ் வாங்கி இருக்கேன்.
செல்வம் தனது மான்சன்எனப்படும் ஆண்களுக்கு மட்டுமான வாடகை விடுதியில் மூன்றாவது மாடியில் மூலை அறையில் இருந்தான். சென்னையில் மாலைக்கு மேல் திருவல்லிக்கேணியில் எப்படியும் கடற்காற்று வீசவே செய்யும். சில சமயம் அது பலமாகவே அடிக்கும். செல்வத்தைப் பொருத்த வரை அந்த அறை மொட்டை மாடிக்குக் கீழே இருந்ததால் எப்போதும் வெயிலின் தாக்கம் இருக்கும். பேருந்துகள் செல்லும் சாலை எதுவும் அருகில் கிடையாது என்பதால் சற்றே வாடகை குறைவு. அவனது இரு சக்கர வாகனத்தை நிறுத்த இடம் இருந்ததாலேயே அவன் இதைத் தேர்ந்தெடுத்திருந்தான். திருவல்லிக்கேணியில் பல பள்ளிகளுக்கு அவன் நிறுவனம் பள்ளியின் வளாகப் பாதுகாப்பு மற்றும் குழந்தைகளுக்கான கற்றுத் தரும் காணொளிகள் உள்ள மென் பொருளை விற்றிருந்தது. அந்தப் பள்ளிகளின் எண்ணிக்கை குறைவுதான். அருகே மந்தவெளி, மைலாப்பூர் மற்றும் ராயப்பேட்டைப் பள்ளிகளையும் சேர்த்தால் மொத்தம் நூறு பள்ளிக்குக் குறைவில்லை. எனவேதான் அவன் அங்கே அறை எடுத்தான்.
விடியற்காலையில் செல்வம் விழித்துக் கொள்ளத் தேவையில்லை. பள்ளிகளில் பதினோரு மணிக்கு மேல்தான் கணிப் பொறி வகுப்புகள் இருக்கும். அனேகமாக எதாவது ஒரு பள்ளியில் அவன் அன்றைய வகுப்புக்கு முன்பு மென்பொருளைச் சரி செய்து தர விரைவான். இன்று என்னமோ அவனுக்கு இரவு இரண்டு மணிக்கே அறையின் வாயிலில் வளையல் குலுங்கும் சத்தம் கேட்பதுபோல இருந்தது. இப்போது மூன்று மணிக்கு மறுபடி அதே சத்தம்.
சிவகுமார் அவசர அவசரமாகக் கிளம்பிப் போய் விட்டான். அவனுடைய அப்பா எழுந்தால் அவன் எங்கே என்பார். விவரத்தைக் கூறினால் தன்னை ஏன் எழுப்பவில்லை என்று கேட்பார். அலுவலக வேலையாகப் போகிறவன் ஏன் அலுவலகப் பையை எங்கேயோ வைத்து விட்டுத் தேடினான் என்றே தெரியவில்லை. சோபாவுக்கும் சுவருக்கும் இடைப்பட்ட பகுதி இருளாகவே இருக்கும். சோபாவை நகர்த்தி விட்டுப் பார்த்தார். இருட்டோடு இருட்டாக கருப்புப் பை கிடந்தது. அதான் அவன் கண்ணில் படவில்லை. பையை இழுத்தார். சற்றே கனமாக இருந்தது.
செல்வத்துக்கு ஆண்கள் மட்டும் வசிக்கும் இந்த மான்ஷனில் வளையல் சத்தம் புதிராக இருந்தது. மாத வாடகை விடுதிகளில் அது மாதிரியான தொழில் எதுவும் நடப்பதில்லை. எனவே அதற்கு வாய்ப்பில்லை. பூனை எதாவது மெல்லிய பாத்திரம் போன்ற எதையேனும் இழுத்துக் கொண்டு ஓடுகிறதா? அவனால் யூகிக்க முடியவில்லை. ஆனால் தூக்கம் கெட்டுவிட்டது. அவனுடைய அறைக்குள்ளே குளியலறை உண்டு. எனவே அவன் அதிகம் வெளியே போக மாட்டான். இரவில் தாமதமாக வரும் பக்கத்து அறைக்காரர்கள் நடமாடினாலும் அவன் எதுவும் கண்டு கொள்ளவே மாட்டான். இன்று யாருமே நடமாடவில்லை. ஏதோ மந்திரம் போட்டதுபோல இயல்பைவிட அமைதியாயிருந்தது. அறையின் கதவைத் திறந்து வெளியே வந்து வராந்தாவில் இருமருங்கும் பார்த்தான். யாருமில்லை. மறுபடி அறைக்குள் நுழையப் போனபோது மொட்டை மாடிக்குச் செல்லும் மாடிப் படியில் வளையல் சத்தம் கேட்டது.
சிவகுமாரின் அலுவலகப் பையைத் திறந்தால் மேலாக அவனது சதுர வடிவ மதிய உணவு டப்பாவே முதலில் கிடைத்தது. அதை அசைக்கும்போதே அவருக்கு அவன் சாப்பிடவில்லை என்பது தெளிவாகத் தெரிந்தது. அதை எடுத்துக்கொண்டு போய் அதில் மீதியிருந்த உணவை சமையலறைக் குப்பைக் கூடையில் கொட்டினார். பின்னர் டப்பாவைப் பாத்திரங்கள் கழுவும் இடத்தில் வைத்தார்.
ஏதோ நினைவு வந்தவராய் வரவேற்பறைக்கு வந்து கருப்புப் பையைக் கையில் எடுத்துத் திறந்தார். அவனின் ஒரு கால்சராயும் மேற் சட்டையும் அதற்குள் இருந்தன. என்ன இது? அவற்றின் மீது திட்டுத் திட்டாக ரத்தம்? குளியலறைக்குப் பையை அப்படியே எடுத்துக்கொண்டு போனார். பைக்குள் வேறு ஏதோ கீழே சொருகி வைக்கப்பட்டிருந்தது.
செல்வத்துக்கு ஏதோ நடமாட்டம் இருப்பது ஊர்ஜிதமாகத் தென்பட்டது. அவன் மாடிப்படியை நோக்கி விரைந்தான். படியின் மீது மெல்லிய வெளிச்சம் மட்டுமே இருந்தது. அவன் படிகள் மீது ஏறி மொட்டை மாடிக்கு அருகில் இருக்கும் சதுரமான நிலையிடத்தை அடைந்தான். மொட்டை மாடிக்கான கதவு திறந்தே இருந்தது. அதனுள் நுழைந்தான். மொட்டை மாடியில் விளக்கு எதுவுமில்லை. தெருவிளக்கின் மெல்லிய வெளிச்சம் படர்ந்திருந்தது. இப்போது கீழே வளையல் சத்தம் கேட்பதுபோல இருந்தது. அவனுக்கு முகமெல்லாம் வியர்த்திருந்தது.
சுசீலாவுக்கு அந்த விடியற்காலை நேரத்திலும் குளித்ததுபோல உடலெங்கும் வியர்த்து விட்டது. அந்தப் பையின் அடிப்பக்கத்தில் ஒரு பெண்ணின் சூடிதாரின் இரு பகுதிகளுமிருந்தன. ரோஜா நிறப் பின்னணியில் மஞ்சள் பூவேலை செய்யப்பட்ட சூடிதார் உடையிலும் திட்டுத் திட்டாக ரத்தம் இருந்தது.
செல்வம் விரைந்து கீழே வந்து அதே வேகத்தில் இன்னும் சில படிக்கட்டுகள் இறங்கி இரண்டாம் தளத்துக்குப் போனான். ஒரு அறையில் மட்டுமே விளக்கு எரிந்து கொண்டிருந்தது. விடுதியே அமைதியில் ஆழ்ந்திருப்பதுபோல இருந்தது. மீண்டும் அறைக்குள் வந்தான். கொஞ்சம் தண்ணீர் குடித்தான். பின்னர் அறையின் கதவைத் தாளிட்டான். படுத்துக்கொண்டான். ஆனால் உறக்கம் வரவில்லை. சற்று நேரத்தில் அவன் காதருகே வளையல் ஓசை. எழுந்தான். வெள்ளைச் சேலை ரவிக்கை, வெள்ளை நிறக் கண்ணாடி வளையல்கள், அவன் படுக்கைக்கு அருகே நிறைய மல்லிகைப் பூவுடன் ஓர் இளம் பெண். திடீரென ஓர் ஆளைப் பார்த்த படபடப்பில் எழுந்து நின்றான். அவள் வாளிப்பான உடற்கட்டுடன் அழகாகத்தான் இருந்தாள். ஆனால் அவளுக்குப் பாதங்கள் இல்லை. பாதங்கள் பூமியில் பதியவில்லை. ‘காலுக்கு மேலே நான் அழகா இல்லையா?’ என்றாள். கிணற்றுக்கு உள்ளே இருந்து பேசுவதுபோல ஓர் ஆழ்ந்த எதிரொலி மிகுந்த சத்தமாக இருந்தது. அறைக்கு வெளியே யாராவது பெண் குரலைக் கேட்டால் அவ்வளவுதான்.
சுசீலா முதலில் கூடத்தில் வந்து அமர்ந்து மின் விசிறியைச் சுழல விட்டார். என்ன செய்திருப்பான் சிவகுமார்? எதை மறைக்கிறான்? உண்மையிலேயே எங்கே போகிறான்?
இது ஆண்கள் இருக்கும் விடுதி,என்றான் செல்வம் சற்றே நடுங்கும் குரலில். ‘ஏன் ஆம்பளையோட இருக்கக் கூடாத பொண்ணா நானு?’ என்றபடி அவள் முன்னே வந்தாள். அவன் பின்னே பின்னே போய்ச் சுவரில் முதுகை இடித்து நின்றான். அவள் அவனை விட ஓரிரு அங்குலம் மட்டுமே உயரமானவள். அவன் முகத்துக்கு இருபக்கமும் சுவர் மீது தனது இரு கைகளையும் வைத்தாள். பின்னர் அவன் கண்களை ஊடுருவி நோக்கினாள். அவளின் கட்டான மார்பகங்கள் அவன் மார்பின் மீது படர்ந்தன. அவள் கால்கள் அவன் கால்களைச் சுற்றின. அவள் கண்களின் ஒரு பாவையில் பாஞ்சாலி, அருந்ததி, வாசுகி, அகலிகை, மேனகை, சகுந்தலை, கண்ணகி, சூர்ப்பனகை, ஊர்மிளா, யசோதரா எனப் பலக் காவிய மாந்தர்கள் மாறிக் காட்சி கொடுத்தனர். அவர்களை அவன் பார்த்ததே இல்லை. ஆனால் இவள் பாவை வழி பார்க்கும்போது அப்படியே பெயர்கள் நினைவுக்கு வருகின்றன. மற்றொரு பாவையில் சமகால சினிமா நடிகைகளின் உருவம் ஆடையின்றி நிர்வாணமாக மாறி மாறி வந்து கொண்டிருந்தது. இந்தக் காட்சித் திகைப்பை அவன் தாண்டும் முன் அவள் உதடுகள் அவன் உதடுகளை நெருங்கின. அவளின் மேலிருந்து காட்டமான மருதாணி வாசனை வீசியது.
சுசீலாவுக்கு அந்தத் துணிகளை என்ன செய்வது என்றே புரியவில்லை. துவைக்கப் போட்டாலும் கறைகள் மறைய வாய்ப்பில்லை. காயும் துணிகள் வேலைக்காரி மற்றும் அண்டை வீட்டார் கண்களில் வம்பாக மாறும். துவைக்க முடியா விட்டால் எப்படி இவற்றை சரி செய்வது. எரிப்பது ஒன்றே வழி? எப்படி எரிப்பது?
அவன் உதடுகளை அவள் கவ்வினாள். பின்னர் நாக்கால் அவன் நாக்கைத் துழாவினாள். அவளது கவ்வல் அவனுக்கு அச்சமூட்டும் அழுத்தத்துடன் இருந்தது. அவளது கால்கள் அவனது கால்களைச் சுற்றி வளைக்க அவள் தன் கைகளை இறக்கி அவனை அணைத்துக் கொண்டாள். திடீரென அவனை விலக்கி,ஏண்டா உனக்கு என்னைப் பிடிக்கலே?’ என்றாள். ‘நான் ஒண்ணும் செய்யலியே?’ ‘அதாண்டா நானும் கேக்கறேன். செய்ய முடியாத அளவு என்ன குறை எனக்கு?’ ‘உன் கண்ணுல பாத்த விஷயமெல்லாம்.’ ‘எதையாவது சொல்லித் தப்பிக்க நினைக்காதே. உனக்கு என்னைப் பொம்பளையின்னு தொணலையின்னுதானே அர்த்தம். டேய், திருவல்லிக்கேணி இங்கிலீஷ் ஸ்கூல் ஹெட்மாஸ்டர் ரூம்ல நீ எந்த ரெண்டு பேரைப் பார்த்தே... அங்கே என்ன நடந்துதுனு எனக்குத் தெரியும். அதெயெல்லாம் முழுங்கின உனக்கு என்னக் கண்டா இளப்பமா இருக்காடா? விடியற நேரமாவுது. நாளை மறுநாள் ராத்திரி வருவேன். ஆம்பிளையா நீ நடக்கலே. உயிரை எடுத்து எங்கூடவே கூட்டிக்கிட்டிப் போயிருவேன்.அவனைக் கட்டில் மீது தள்ளி விட்டு மறைந்தாள்.
இனி அந்த அறையிலிருப்பதில் அர்த்தமில்லை. காலை எழுந்ததில் இருந்து எப்போது பத்து மணி ஆகும் என்று பரப்போடு இருந்தான் செல்வம். பத்தரை மணிக்குத் தான் மேன்ஷன் அலுவலகம் திறந்தது. அறையைக் காலி செய்வதாய்க் கூறி விட்டு, மேலே வந்தான். பெட்டி படுக்கையைத் தயார் செய்தான். மதியம் இரண்டு மணி போல வாட்ச் மேன்அறைக் கதவைத் தட்டினார். திறந்தார். ‘சார் இவர் பேரு சிவகுமார். உங்க ரூமுக்கு வர்றாருஎன்று கூறிப் போய் விட்டார். வெடவெடவென இருபத்தைந்து வயதிருக்கும் இளைஞன். ‘உள்ளே வாங்கஎன்றான் செல்வம்.
சார் ஐ ஆம் சிவகுமார். கூரியர் கம்பெனிலே வேலை பாக்கறேன்என்றான் அவன். ‘நான் ஒரு பைதான் கொண்டு வந்திருக்கேன்.
இன்னும் ஒன் அவர்லே நான் கிளம்பிடுவேன். நீங்க இப்பவே இங்கே தங்கிக்கலாம்.
தேங்க்ஸ் சார்என்றவன், கட்டிலுக்குக் கீழே குனிந்து பார்த்து,உங்க ஷூஸ் இருக்குஎன்றான். தனது பெட்டியைத் திறந்து அதற்குள் இருந்த ஒரு பிளாஸ்டிக் பையை எடுத்து அதற்குள் இந்த காலணிகளை வைத்தான் செல்வம்.
சுசீலா கணவரிடம் அவன் தனது அறையில் உறங்குகிறான் என்றே கூறி இருந்தார். மாலையில் கணவர் அலுவலகத்தில் இருந்து வந்ததும் அவனது பையில் இருந்த ரத்தம் தோய்ந்த உடைகள் பற்றி எதுவும் கூறவில்லை. பிற அனைத்தையும் அப்படியே கூறினார். உடனே அவர் சிவகுமாரின் கைபேசியில் அவனை அழைத்தார். உடனே மணி அடிக்கும் சத்தம் கேட்டது. அது அவனது கைபேசி ஒலிக்கும் சத்தம்தான். அவனது அறைக்குள் இருந்து வந்தது சத்தம். அவர் அங்கே போனார். சிவகுமாரின் கைபேசி அங்கேதான் இருந்தது.
ஒரு கையில் செல்வத்தின் பெட்டி மறுகையில் அவனது மடிக்கணினிப் பை இரண்டையும் எடுத்துக் கொண்டு தரைத்தளம் வரை வந்தான் சிவகுமார். மற்றொரு பெட்டி மற்றும் படுக்கை இவற்றை செல்வம் எடுத்துக் கொண்டு இறங்கினான்.
ரொம்ப நன்றி சிவகுமார்என்றவன்,ஒரு நிமிஷம் ரூமை சரி பார்த்து விட்டு வர்றேன்என மாடிக்கு விரைந்தான். பல பழைய நினைவுகளுடன் அறையைச் சுற்றி நோட்டம் விட்டவன் கண்ணில் பல வெள்ளை வளையல் துண்டுகள் கட்டிலுக்கும் சுவருக்கும் இடையே தென்பட்டன. அவற்றை எடுத்து முகர்ந்து பார்த்தான். மருதாணி வாசம். பின்னர் கால்சராய்ப் பைக்குள் போட்டுக் கொண்டு அறையை விட்டு வெளியேறினான்.

தேவையா இந்துத்துவ அறிவியக்கம்? | அரவிந்தன் நீலகண்டன்அண்மையில் இணைய இதழான சொல்வனத்தில் எழுத்தாளர் அம்பை சிறப்பிதழில் அவரது வாழ்க்கையில் நடந்த இரு விஷயங்களைக் குறிப்பிட்டிருந்தேன். இரண்டுமே அவர் என்னிடம் உரையாடல்களின்போது சொன்னவை. ஒன்று: அவர் டெல்லியில் உள்ள கல்லூரி விரிவுரையாளர் சேவைக்கான நேர்காணலுக்காகச் சென்றிருக்கிறார். அதில் அவரிடம் விடுதலைப் போராட்ட வீரர்களின் பெயர்களைப் பட்டியலிடச் சொல்கிறார்கள். அன்று அம்பைக்கு ‘அரசியல் சரித்தன்மை’ தெரியாது. அவர் சொல்லும் பெயர்களில் ஒன்று சாவர்க்கர். அவருக்கு அந்த வேலை கிடைக்கவில்லை. அவர் அதை இந்த பதிலுடன் இணைத்துப் பார்க்கவில்லை. ஏதோ வேலை கிடைக்கவில்லை, அவ்வளவுதான். ஆனால் பின்னாட்களில் அவரிடம் ஒரு கேள்வி கேட்கப்படுகிறது. ‘ஏன் சாவர்க்கரின் பெயரைச் சொன்னீர்கள்? நீங்கள் வித்யார்த்தி பரிஷத்தா என்கிற ஐயம் அன்றைக்கு உங்கள் மீது ஏற்பட்டது.’ சாவர்க்கர் பெயரை சொன்னது அவரை நேர்காணல் செய்த முக்கிய இடதுசாரி பேராசிரியர்களுக்கு உடனடி ஒவ்வாமையை ஏற்படுத்தியிருக்கிறது.
பின்னாட்களில் அவர் ஜவஹர்லால் நேரு பல்கலை மாணவி என்பதும் அவர் இந்துத்துவ இயக்கத் தொடர்புகள் ஏதுமற்றவர் என்பதைத் தெள்ளத்தெளிவாக தெரிந்த பின்னருமே இந்திய வரலாற்று ஆராய்ச்சி அமைப்பு (ICHR, Indian Council for Historical Research) இல் வேலை கிடைக்கிறது. அங்கு ஆராய்ச்சிகளுக்கு நிதி ஒதுக்குவது குறித்த முடிவுகள் எடுக்கப்படும் கூட்டங்களில் அம்பை அமரக்கூடிய வாய்ப்பு அவருக்குக் கிடைக்கிறது. அவரால் முடிவுகள் எடுக்க முடியாது. ஆனால் அந்தக் கூட்டங்களுக்கு அவர் சாட்சி. அங்கு நடந்த விஷயங்களை அவர் தார்மீகமாக வெளியில் சொல்ல முடியாது. ஆனால் ஒட்டுமொத்தமாக அதன் போக்கை அவரால் சொல்ல முடியும். அதற்கு தார்மீகத் தடை எதுவும் இல்லை. அவர் அதை ஒரே வரியில் சொல்கிறார்: ‘மார்க்சியப் பார்வை இல்லாத ஆராய்ச்சிகள் பெருமளவில் ஏற்கப்படுவதில்லை. அங்கு தெள்ளத்தெளிவாக மார்க்சிய சார்பு இருந்தது.’
இவை இரண்டுமே அம்பை முக்கியமானவை எனக் கருதவில்லை. போகிற போக்கில் உரையாடலில் சொல்லிச் சென்ற விஷயம். ஆனால் இவற்றைத் தரவுகளாகப் பயன்படுத்தலாமா எனக் கேட்டபோது சரி எனச் சொன்னார்.
ICHR என்பது இந்திய வரலாற்று ஆராய்ச்சிக்காக இந்தியக் குடிமக்களின் வரிப்பணத்தில் இயங்கும் அமைப்பு. 1970களிலேயே அல்லது அதற்கும் முன்பாகவே இவை இடதுசாரிகளின் ஆதிக்கத்துக்குள் வந்துவிட்டிருந்தன. நேருவிய மார்க்சியர்கள், மார்க்சிய இஸ்லாமியர்கள் (அல்லது இஸ்லாமிய மார்க்ஸியர்கள்) என இருவகையான அறிஞர்கள் இருந்தனர். இவர்களே தலைநகரிலிருந்து எப்படிப்பட்ட விதத்தில் இந்திய வரலாறு எழுதப்பட வேண்டுமென்று முடிவு செய்தார்கள். எப்படிப்பட்ட விதத்தில் இந்திய வரலாறு எழுதப்படுவதற்கு மட்டுமே இந்திய அரசின் நிதி உதவியும், இந்திய அரசு இயந்திரமும் பயன்படுத்தப்படும் என்பதை முடிவு செய்தார்கள். சாவர்க்கரின் பெயரைச் சொல்வது கூட உங்களுக்கு அரசாங்க வேலைகளை இழக்க செய்யும் என்கிறபடியிலான மிகக் கடுமையான ஆனால் கண்ணுக்குத் தெரியாத சங்கிலிகள் உருவாக்கப்பட்டிருந்தன. 1990கள் வரை அரசாங்க வேலை என்பது மட்டுமே நிரந்தரமான வருவாய்க்கான வழி என இருந்த நிலையில் இந்த கண்ணுக்குத் தெரியாத நிர்ப்பந்தங்கள் எத்தனை வலிமையானவை எனச் சொல்லத் தேவையில்லை. வேலை தேடும் இளைஞனுக்கு ஏறக்குறைய நெற்றிப்பொட்டில் வேலை வாய்ப்புத் துப்பாக்கியை வைத்து ‘இடதுசாரி சித்தாந்தத்தை ஏற்கிறாயா, இல்லாவிட்டால் வேலையில்லாத் திண்டாட்டத்தில் சாகிறாயா’ எனக் கேட்பதுதான் இது.
இது பாசிசம் இல்லை என்றால் வேறெது பாசிசம்? இன்னும் சொன்னால் இது பாசிசத்தின் அடுத்த நிலை. பெனிட்டோ முஸோலினி நேருவியர்களைப் பார்த்து ‘அட என் செல்லங்களா’ எனச் சொல்லியிருப்பார். ‘நானாவது இந்திரா போல தெரு ரவுடித்தனமான அடக்குமுறைகளை மட்டும்தான் செயல்படுத்தினேன். நேருவிய பாசிஸ்ட்களான நீங்களோ அடுத்த தளத்துக்கு போய் அறிவு நிலை பாசிசத்தை அல்லவா அமைப்பு ரீதியாகச் செயல்படுத்திவிட்டீர்கள்’ என உச்சி மோந்து மெச்சியிருப்பார் நம்மூர் ரொமிலா தாப்பர்களையும் இர்பான் ஹபீப்களையும்.
இந்த நிலையில்தான் இன்றைக்கு கேள்வி எழுகிறது. எங்கே இந்துத்துவ அறிவியக்கம்? ‘இந்த இந்துத்துவர்களுக்கு சிந்தனையாளர்களைக் கண்டாலே ஆகாது. ஏனென்றால் இவர்களுக்கு சிந்தனை சுதந்திரம் பிடிக்காது. இவர்கள் ஒரு ரொமிலா தாப்பரை உருவாக்கியிருக்கிறார்களா? இவர்களால் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் போல ஒரு அமைப்பை உருவாக்க முடியுமா? முடியாது. இவர்களுக்குச் சிந்திக்க தெரியாது. கூச்சல் போடத்தான் தெரியும். பாசிஸ்ட்கள். வெத்தலையோ பான்பராக்கோ குதப்பிக் கொண்டு கடப்பாறை எடுத்துக்கொண்டு ஜெய்ஸ்ரீ ராம் என கோஷம் போட மட்டுமே தெரிந்தவர்கள். நாங்கள்? நாங்கள் அறிவு ஜீவிகள். இந்திய பண்பாட்டை ஆக்ஸ்போர்ட்டிலும் காம்ப்ரிட்ஜிலும் சென்று கற்றவர்கள்.’ ஆம், ரொமிலா தாப்பர் முதல் சகரிகா கோஷ் வரை இந்திய வரலாற்றைக் கற்க இங்கிலாந்து சென்ற அறிஞர் பெருமக்கள்தான். எனவே ‘இங்குள்ள பண்பாட்டு மையம் தொடங்கி விளிம்பு நிலை மக்கள் வரை குளிர் பதனூட்டப்பட்ட அறைகளிலிருந்து முற்போக்கு பத்வா அளிக்க நாங்களே தகுதியானவர்கள். சமானிய பாமரரான நீங்கள் அதையே உங்கள் வரலாறாகவும் சமுதாய யதார்த்தமாகவும் ஏற்க வேண்டும்.’
இடதுசாரிகள் போல மக்கள் வரிப்பணத்தை உறிஞ்சி அமைப்பு அதிகாரங்களைக் கைப்பற்றி உருவாக்கப்பட்ட இந்துத்துவ அறிவியக்கம் என்று ஒன்று இல்லைதான். அதில் சந்தேகமே இல்லை. ஆனால் இந்துத்துவ உயிரியக்கம் என்று ஒன்று என்றென்றுமாக இருக்கிறது. அதில் ஒரு பாகமாக வாழ்கிறது அறிவியக்கம். பாரத மரபில் உயிருக்கும் அறிவுக்கும் பிரிவு எதுவும் இல்லை. தொல்காப்பிய சூத்திரம் அறிவையே, அறிதலையே உயிரினங்களின் அடிப்படையாக்கி அளித்தது. ப்ரபோத விதிதம் – எவ்வித அறிதலும் பிரம்மத்தின் வெளிப்பாடு, அதுவே உயிரியக்கம் என்பது உபநிடதம்.
இதன் தொடர்ச்சியே மாபெரும் அத்வைத ஞானியான வித்யாரண்யரிடமிருந்து விஜயநகரம் உருவாவது. குரு கோவிந்த சிம்ஹனைப் போல சரித்திர ஞானமும் சாஸ்திர ஞானமும் கொண்டவரிடமிருந்தே காலசா உருவானது. ராமகிருஷ்ண-விவேகானந்த மரபிலிருந்து சூல்கொண்ட செயல்முறை வேதாந்தம் டாக்டர் ஹெட்கேவார்-குருஜி கோல்வல்கரால் ராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக சங்கமாயிற்று. சங்க கங்கையின் ஞான பிரவாகத்தில் இந்த தேசத்தின் அறிவியக்கம் எப்போதும் போல் இந்த தேசத்தின் உயிரியக்கத்தின் பிரிக்கமுடியாத கூறாகவே உள்ளது.
ஒரு சிறிய சோதனையைச் செய்யுங்கள். உங்களுக்குக் கிடைக்கும் இன்றைய இலக்கிய அறிவுஜீவி இதழ்களை, கட்டுரைகளை, ஆசிரியர்களை எடுத்துக் கொள்ளுங்கள். அவர்களின் அனைத்து இந்தியத்தன்மை கொண்ட மேல்பூச்சுகளுக்குள்ளும் நீங்கள் அவர்களின் மேற்கத்திய பிச்சைப்பேறுகளைக் கண்டு கொள்ளலாம்.
ஒரு எடுத்துக்காட்டு. இங்கு ‘தலித்’துகளின் வாழ்க்கையைத் தாது வருடப் பஞ்சத்தின்போது சித்திரப்படுத்தும் ஒரு நாவலை எடுத்துக் கொள்வோம். மிகக் கவனமாக அதில் மிஷினரிகள் வேறு, காலனிய அதிகாரிகள் வேறு என்கிற வேறுபாடு சித்தரிக்கப்பட்டிருக்கும். கிறிஸ்தவ இறையியல் மேற்கத்திய நாடுகளில் ஏற்றெடுத்துள்ள ஒரு தூய்மைப்படுத்தல் இது. என்னதான் மிஷினரி சுவர்களுக்குள் சுதேச அமெரிக்கக் குடிகளும் ஆப்பிரிக்க இன மக்களும் கொடுமைகளை அனுபவித்திருந்தாலும் அவற்றை எல்லாம் இன்றைக்கு மிக அமைதியாக ஆனால் நிச்சயமாக மாற்றிக்கொண்டிருக்கிறார்கள் மிஷனரி வரலாற்றெழுத்தர்கள். மிஷனரிகள் வேறு காலனியாதிக்கம் வேறு. இதையே நீங்கள் நாவலில் காண முடியும். என்னதான் மிஷினரிகள் பஞ்சங்கள் மூலம் இந்துக்கள் தன் மதிப்பு இழந்து மிஷினரி பிரச்சாரங்களுக்குச் செவி மடுத்தார்கள் எனப் பஞ்சங்களை மனிதத்தன்மை கொஞ்சமும் இன்றிப் புகழ்ந்தாலும் நம்மூர் நாவலில் ஒரு தூய கிறிஸ்தவன் காலனியத்துக்கு அப்பாலாக பஞ்சங்களில் மடியும் நம்மூர் மக்களுக்காக இரங்குவான். நம்மூரிலோ பஞ்சங்களில் மடிபவர்கள் தலித்துகளாக மட்டுமே இருக்க நம்மூர் ‘மேல்சாதியினரோ’ பிரிட்டிஷ் அதிகார வர்க்கத்துடன் தங்களை இணைத்துக் கொள்வர். இது உண்மையில் மேற்கத்திய நியோ காலனியம் பிச்சை போட்ட ஒரு பார்வை. சரித்திரத் தரவுகள் சொல்வது வேறு. எல்லா சாதியினரும் பஞ்சத்தால் கஷ்டப்பட்டார்கள். தக்காண மராட்டியத்தின் வசுதேவ பல்வந்த் பட்கே முதல் தஞ்சை மாவட்ட சைவ ஆதீனங்கள் வரை பஞ்சத்தை எதிர்த்து தங்களாலான சேவைகளைச் செய்தார்கள். கிறிஸ்துவின் ஊழியர்களுக்கோ இவை ஒன்றும் அவ்வளவு உவப்பானதாக அமையவில்லை.
ஆனால் நாவல் மேற்கத்தியப் பண்பாட்டின் மானுட நேசத்தையும் கிறிஸ்தவத்தின் எளியோர் மீதான அன்பையும் இந்தியர்களின் மானுடமற்ற சாதியக் கொடுமையுடன் வேறுபடுத்திக் காட்டுவதாக அமையும். அதாவது 2010களில் தமிழில் வரும் படைப்புக்கும் 19ம் நூற்றாண்டு மிஷினரி பிரச்சார மூன்றாந்தர இலக்கியத்துக்கும் வேறுபாடு நகாசு வேலைகளில் இருக்கிறதே அன்றி அதன் உள்ளீட்டில் இல்லை.
இப்படி பொதுமைப்படுத்துவதையும் பாரதத்தை எதிர்மறையாக சித்தரிப்பதையும் கடுமையாக எதிர்த்தவர்களில் காந்தியும் ஒருவர். அவரது முன்னோடி விவேகானந்தர். காதரீன் மேயோவை இலை நடுவில் வைத்துவிட்டு காந்தியை உறுகாய் போல் வைத்து அதே காந்தியை காரியமானது கறிவேப்பிலை என ஒதுக்கும் ஒரு சிந்தனை இன்றைக்கு உருவாக்கப்பட்டிருக்கிறது. இவர்கள்தான் கேட்கிறார்கள், ‘எங்கே இந்துத்துவ சிந்தனை மரபு?’
பாரத சிந்தனை மரபென்பது இன்றைக்கு இந்துத்துவ இயக்கத்தில் மட்டுமே நீரோட்டமாக இருந்து வருகிறது. தீனதயாள் உபாத்யாயா, தத்தோ பந்த் தெங்கடி, தரம்பால், ஜெயின் சகோதரிகள் (மீனாட்சி & சந்தியா), சீதாராம் கோயல், ராம் ஸ்வரூப் என நீளும் இந்த சிந்தனை மரபு மக்கள் வரிப்பணத்தில், அரசமைப்பு அதிகாரத்தில் உருவானதல்ல. ஆனால் அவற்றின் தெளிவும் ஆழமும் சுய வேர்ப் பிடிப்பும் கொண்ட சிந்தனைக்கு சமானமான ஒரு பத்தி கூட இத்தனை ஆண்டுகளில் ஒட்டுமொத்த ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக ஆராய்ச்சிகளிலிருந்து எழுந்ததில்லை. தீன தயாள் உபாத்யாயா ஆராய்ச்சி மையத்தின் தலைமையிலிருந்த காலம் சென்ற நானாஜி தேஷ்முக் சித்ரகூடத்தின் கிராமங்களை வழக்குகளில்லாத கிராமங்களாக மாற்றினார். மிகச் சிறந்த சிந்தனையாளர்தான். ஆனால் அவரது சிந்தனை என்பது வெளிப்பட்டதென்னவோ அவரின் செயல்பாடுகளில். அவரது வாழ்க்கையே அவரது சிந்தனை.

நானாஜி தேஷ்முக்
சில ஆண்டுகளுக்கு முன்னர் திருப்பூரில் ஜீவா என்கிற சூழலியல் ‘போராளி’ ஒருவரின் உரையைக் கேட்டேன். இந்த ஜீவா என்பவர் தமிழ்நாட்டின் முதன்மைச் சூழலியல் சிந்தனையாளரென எழுத்தாளர் அதிகார வர்க்கத்தால் முன்னிறுத்தப்படுபவர். ‘விதையில்லாத திராட்சையை தின்னுற நீ? அப்ப உனக்கு விதையில்லாமல் போயிடும். உனக்கு ஆண்மை போயிடும்’ என்று ஆவேச ஆட்டம் ஆடுவதுதான் அவரது ‘உரை’யாக இருந்தது. இப்படிப்பட்டவர்கள் சிந்தனைச் சிற்பிகள். ஆனால் இன்றைய தேதியில் மிக முக்கியமான சூழலியல் மாற்றங்களை தமிழ்நாட்டில் கொண்டு வந்திருக்கும் அமைப்பு விவேகானந்த கேந்திரத்தின் இயற்கை வள அபிவிருத்தி திட்டம் என்கிற நார்டெப். இவர்கள் மிகக் குறைவான அரசு ஆதரவுடன் தமிழ்நாட்டில் ஆற்றியிருக்கும் பணிகள் அபரிமிதமானவை. ஆனால் என்ன, இவர்களால் இப்படி ஜீவா போல முட்டாள்தனமாக ‘சூழலியல் சீமான் தனமாக’ பேச முடியாது. இவர்களின் செயல்பாடுகளே இவர்களின் அறிவியக்கம். புளியங்குடி அந்தோனி சாமியின் புழக்கடை பயோகேஸ் கலன் அதை சொல்லும்.
ராம் ஸ்வரூப் 1970களில் 80களில் எழுதிய நூல்களைப் படியுங்கள். இன்றைக்கு மேற்கத்திய நாடுகளில் நடக்கும் மத அனுபவங்களின் நியூரோ அடிப்படைகள் குறித்த ஆராய்ச்சிக்கான சட்டகத்தை நீங்கள் அவரிடம் காணலாம். ஏன் இந்தியாவில் இந்த ஆராய்ச்சிகள் நடக்கவில்லை? பதஞ்சலியும் திருமூலரும் பிறந்த மண்ணில் சமய அனுபவங்களின் நரம்பியல் அடிப்படைகள் குறித்து ஏன் ஒரு ஆராய்ச்சியும் இல்லை? ஏனென்றால் அது நேருவிய மார்க்சிய பத்வாக்களால் அறிவுலகத்தில் விலக்கப்பட்டதாயிருக்கிறது.
சுருக்கமாகச் சொன்னால், பாரதத்தின் அறிவியல்-அறிவியக்க முன்னேற்றத்தில் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக பாணி அறிவு ஜீவிகள் மிகப்பெரும் தடைக்கற்கள். அவர்கள் அறிவுலகில் கோலோச்சுவதற்காக இந்திய தேசமே கட்டுண்டு கிடக்கச் செய்தார்கள். இவர்களின் நேருவிய பாசிசத்தின் பளிங்கு மாளிகைகளுக்குக் கீழே பாதாளச் சிறைகளில் பாரதிய சிந்தனை மரபைச் சிறைப்படுத்த யத்தனித்தார்கள். அதைத்தான் உடைத்திருக்கிறது இந்துத்துவம். இந்துத்துவம் இவர்களின் அதிகார மாளிகைகளை அச்சுறுத்துகிறது. பரிபூரண சிந்தனைச் சுதந்திரத்தின் முதல் கீற்றை நேருவிய-மார்க்சிய இருளில் ஆழ்த்தப்பட்ட தேசத்தின் ஆன்மாவுக்கு அளிக்கிறது.
இருளிலேயே இருந்து பழகி சுகித்த சாக்கடைவாசிகளுக்கு அந்த ஒளியின் துளி நஞ்செனக் கசப்பதில் ஆச்சரியமென்ன?

அந்தமானில் இருந்து கடிதங்கள் - 1 : வீர சாவர்க்கர் | தமிழில்: VV பாலாகடிதம் 1
ஓ தியாகிகளே
சுதந்திரதிற்கான போராட்டம் துவங்கியது முதல்
வழிவழியாக நாம் அதை தொடர்ந்து கொண்டிருக்கிறோம்.
இதில் தோல்விகள் நிரந்தரம் இல்லை, வெற்றி நிச்சயம்.
இன்று மே 10ம் தேதி. இந்தநாளில்தான் 1857ம் ஆண்டு தியாகிகளால் முதல் சுதந்திரப் போராட்டம் துவங்கப்பட்டது. நம்முடைய அடிமைத்தளையை அறுத்தெறிய நம் தாய்நாடு வாளேந்திய நாள். விடுதலைக்கான முதல் அடியை நம் தாய்நாடு கொடுத்த நாள். பரங்கியரைக் கொல்வோம் என்ற போர்முழக்கம் ஆயிரக்கணக்கான போராளிகளால் எழுப்பப்பட்ட நாள். மீரட்டில் இருந்த சிப்பாய்கள் டெல்லி நோக்கி தங்கள் புரட்சிப் பயணத்தை ஆரம்பித்த நாள். தங்கள் புரட்சி போராட்டத்திற்குக் கொள்கைகளை வகுத்து ஒரு தலைவரையும், ஒரு கொடியையும் உருவாக்கிய நாள். அந்தப் புரட்சிப் போராட்டத்தை ஒரு தேசியப் போராட்டமாகவும் ஒரு சமயப் போராட்டமாகவும் மாற்றிய நாள்.
தியாகிகளே, உங்களுக்கு பெருமை உண்டாகட்டும். நம் நாட்டின் மதங்கள் மதமாற்றத்தால் பாதிக்கப்பட்டபோது நம் இனத்தின் பெருமையைக் காக்க நீங்கள் இந்தப் போராட்டத்தை நடத்தினீர்கள். அதுவரை அணிந்திருந்த தங்களின் முகமூடிகளை நீக்கி போலிகள் நம் நாட்டை அடிமை சங்கிலிக்குள் பிணைத்தனர். இவர்களை நம்பி நம் தாய்நாடு ஏமாந்தபோது 1857ம் வருட போராட்டத்தின் தியாகிகளே, நீங்கள் நம் தாய்த்திருநாட்டை எழுச்சி அடையச் செய்து நம் தாய்நாட்டின் பெருமையைக் காக்க ‘பரங்கியரைக் கொல்வோம்’ என்ற வீர முழக்கத்தை எழுப்பி, போர்க்களம் புகுந்தீர்கள். தெய்வீகமும் தேசியமும் மட்டுமே உங்களது தாரக மந்திரமாக இருந்தது. உங்களது போராட்டம் மிகச் சரியான ஒன்றுதான். நீங்கள் போராடாமல் இருந்திருந்தால் ரத்தம் சிந்த வேண்டிய அவசியம் இருந்திருக்காதுதான். ஆனால் அடிமைத்தளையில் இருப்பது அதைக்காட்டிலும் பெருத்த அவமானத்தைத் தரக்கூடியது. அதுமட்டுமில்லாமல் அடிமைத்தளையை எதிர்த்துப் போராடாத நம் நாட்டிற்கு விடுதலை தேவை இல்லை, நாம் அடிமையாய் இருக்கத்தான் லாயக்கு என்று உலகம் நம்மைப் பார்த்து கூறியிருக்கும். 1857-இலும் கூட நம் பெருமையையும் பாரம்பரியத்தையும் காத்துக்கொள்ள நாம் ஒன்றும் செய்யவில்லை என்று அவர்கள் கூறியிருப்பார்கள்.
அதனால் இந்த நாளை உங்கள் நினைவுக்கு காணிக்கையாக்குகின்றோம். இந்த நாளில்தான் நீங்கள் ஒரு புதிய கொடியை உயர்த்திப் பறக்க விட்டீர்கள், ஒரு புதிய பாதையை வகுத்தீர்கள், அடைய வேண்டிய ஒரு புதிய இலக்கை வரைந்தீர்கள், நம் தேசத்திற்கு விடிவு வர வேண்டும் என்று சூளுரைத்தீர்கள்.
உங்களுடைய புரட்சிப்போராட்டத்தின்போது நீங்கள் விடுத்த அறைகூவலை நாங்கள் வழிமொழிகின்றோம். அன்னியரை வெளியேற்ற வேண்டும் என்ற உங்கள் லட்சியம் நிறைவேற நாங்களும் உழைப்போம். அடிமைத்தளை உடைக்கப்படும் வரை, நமக்கு சுதந்திரம் முற்றிலுமாக கிடைக்கும் வரை 1857ம் ஆண்டு துவங்கிய போர் முடிந்துவிட்டது என்று கருத முடியாது. சுதந்திரதிற்காக மக்கள் எழுச்சி அடையும் போதெல்லாம், சுதந்திர வேட்கை நம் தியாகிகளின் மனதில் தோன்றும்போதெல்லாம் தன் முன்னோர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்காக ஒரே ஒருவன் பழி தீர்க்க எழுந்து நின்றாலும் இந்த போர் முடிவுக்கு வரவில்லை என்றுதான் பொருள். புரட்சிப் போராட்டத்தில் அமைதி ஒப்பந்தம் என்ற பேச்சுக்கே இடமில்லை. சுதந்திரம் அல்லது வீர மரணம் என்ற இரண்டில் ஒன்றுதான் நிதர்சனம். உங்களுடைய நினைவுகள் எங்களுக்கு உத்வேகம் அளிக்கின்றன. நீங்கள் 1857ம் ஆண்டு துவங்கிய போரை நாங்கள் தொடர உறுதியோடுள்ளோம். நீங்கள் நடத்திய போராட்டம் இந்தப் போரின் முதல் கட்டம் என்றே நாங்கள் கருதுகிறோம். அதில் ஏற்பட்ட பின்னடைவு போரில் தோற்றதாக அர்த்தமாகாது. அதில் ஏற்பட்ட தோல்வியை இந்தியா ஏற்றுக்கொண்டதாக உலகம் கூறுமா என்ன? 1857ம் ஆண்டு நடந்த போராட்டத்தில் சிந்திய ரத்தம் வீணாக போய்விடுமா? நம் தந்தையர்கள் ஏற்றுக்கொண்ட உறுதிமொழியை அவர்களுடைய புதல்வர்கள் நிறைவேற்றமாட்டார்களா? இந்திய தேசத்தின் வரலாற்று தொடர்ச்சி முடிந்து போய்விடவில்லை. 1857ம் ஆண்டு மே 10ம் தேதி துவங்கிய போர் 1908ம் ஆண்டு மே 1ம் தேதியிலும் தொடந்துகொண்டுதான் இருக்கிறது. சுதந்திரம் அல்லது வீர மரணம் இரண்டில் ஒன்று கிடைக்கும் வரை எங்களது போராட்டம் தொடந்துகொண்டேதான் இருக்கும்.

எங்களது இந்தப் போராட்டத்தில், தியாகிகளாகிய நீங்களே எங்களுக்கு உத்வேகம் அளிக்கின்றீர்கள். அந்த உத்வேகம் இல்லையென்றால் பல சிறு வேறுபாடுகளால் சிதறுண்டிருக்கும் எங்களால் ஒன்றுபட்ட எங்கள் தாய்த் திருநாட்டைப் பார்க்க இயலாது. அந்த ஒற்றுமையை நீங்கள் எப்படி கொண்டு வந்தீர்கள் என்ற ரகசியத்தை எங்களுக்குச் சொல்லுங்கள். ஹிந்துக்கள் மற்றும் முகமதியர்களின் இசைவோடு எப்படி பரங்கியரின் அதிகாரத்தை தவிடுபொடியாக்கி சுதேசியை மக்களிடையே பிரபலப்படுத்தினீர்கள்; சாதி, மதம் போன்ற பிடிப்புகளில் இருந்து மக்களை எப்படி தேசம் என்ற மேலான பந்தத்தை ஏற்படுத்தினீர்கள்! பகதூர் ஷா எப்படி நாடு முழுவதிலும் பசு வதைத் தடையை அமுல்படுத்தினார்! மாவீரரான நானா சாஹிப் எப்படி டெல்லி சக்ரவர்த்திக்கு பீரங்கி முழக்கத்தின் மூலம் முதல் மரியாதையைத் தந்து தன்னுடைய மரியாதையை இரண்டாவதாக ஏற்றுக் கொண்டார்! எப்படி நம் எதிரி ஒற்றுமையாக இருந்த நம்மைப் பார்த்து, ‘இந்த இந்திய போராட்டத்தின் மூலம் நிர்வாகிகளுக்கும் வரலாற்று ஆய்வாளர்களுக்கும் அறிந்துகொள்ள நிறைய விஷயங்கள் கிடைத்திருக்கலாம். ஆனால் எல்லாவற்றையும் விட பெரிய விஷயம், பிராமணர்களும் சூத்திரர்களும், ஹிந்துக்களும் முகமதியர்களும் இணைந்து ஒரு போராட்டத்தை நடத்த இயலும் என்கின்ற செய்திதான் அது. இந்த நாட்டில் பல்வேறு மதம் மற்றும் இனக்குழுக்கள் இருக்கின்றபடியால் இங்கு நாம் பாதுகாப்பாக ஆட்சி செய்ய முடியும் என்ற எண்ணம் இனி செல்லுபடியாகாது. ஏனென்றால் அவர்கள் ஒருவரை ஒருவர் புரிந்துகொண்டு பரஸ்பர மரியாதையுடன் மற்றவர்களுடைய செயல்பாடுகளை அணுகுகிறார்கள். நம்முடைய அரசு இத்தகைய புரட்சிகள் வெடிக்கக் கூடிய சாத்தியங்கள் இருக்கும் ஒரு சமுதாயத்தின் மேல் பத்திரமில்லாமல் நின்று கொண்டிருக்கிறது. இங்கு மதமும் தேசப்பற்றும் இணைந்து இருக்கின்றது. தேசபற்றை வலியுறுத்தும் மதமும், மதச் சுதந்திரத்தை மதிக்கும் தேசப்பற்றும் இங்கு இருக்கின்றது என்பதை நமக்கு இந்தப் புரட்சிப் போராட்டங்கள் அடையாளப்படுத்தி இருக்கின்றன’ என்று கூறினார்கள்.
இப்பேற்பட்ட ஒரு மாபெரும் போராட்டத்தை நடத்தத் தேவையான சக்தியையும் அதனை ரகசியமாகச் செய்யகூடிய சூட்சுமத்தையும் எங்களுக்கும் தாருங்கள். பசுமையான நிலத்தின் அடியில் வெடித்துச் சிதறக் காத்திருக்கும் எரிமலைக் குழம்பு இருப்பதை அறியாத எதிரி, அதனை எதிர்கொள்ள தயாரில்லாத நிலையில் இருந்தான். அதுபோன்ற சாதுர்யத்தை எங்களுக்கும் தாருங்கள். இந்தியாவில் உள்ள ஒவ்வொரு கிராமம்தோறும் எப்படிப் புரட்சி பற்றிய செய்திகளை சப்பாத்தி மூலம் பரப்பினீர்கள் என்ற வித்தையை எங்களுக்கும் கற்றுத் தாருங்கள். ஒரே மாதத்தில் ஒவ்வொரு படைப்பிரிவும், ஒவ்வொரு இளவரசனும், நகரங்கள், சிப்பாய்கள், போலீஸ்கள், ஜமீன்தார்கள், பண்டிட்கள், மவுல்விகள் என்று எல்லோரையும் எப்படி இந்தப் புரட்சித் தீ பற்றிக்கொண்டது, கோவில்களிலும் மசூதிகளிலும் ‘பரங்கியரைக் கொல்வோம்’ என்ற கோஷம் எப்படி விண்ணைப் பிளந்தது என்பதைக் கூறுங்கள். மீரட் எழுச்சி அடைந்தது, டெல்லி எழுந்தது, பெனாரஸ் எழுந்தது, ஆக்ரா, பாட்னா, லக்னோ, அலாஹாபாத், ஜாதகல்பூர், ஜான்சி, பாண்டா, இந்தோர், பெஷாவரில் இருந்து கல்கத்தா வரையிலும், நர்மதாவில் இருந்து ஹிமாலயம் வரையிலும் அந்த எரிமலை வெடித்து எல்லோரையும் புரட்சி ஆட்கொண்டது.
ஓ தியாகிகளே, இந்த மாபெரும் புரட்சியை நடத்தும்போது நம் மக்களிடம் நீங்கள் கண்ட குறைபாடுகள் என்னவென்பதையும் எங்களுக்குக் கூறுங்கள். இந்த மாபெரும் தேசிய வேள்வியில் பங்கு பெறாமல் உங்களுடைய தன்னலமற்ற போராட்டத்தை நீர்த்து போகும்படி செய்த நபர்களின் சுயநலத்தைப் பற்றியும் சொல்லுங்கள். ஹிந்துஸ்தானத்தின் தோல்விக்குக் காரணம் ஹிந்துஸ்தானம் மட்டுமே என்பதையும் கூறுங்கள். பல நூற்றாண்டு கால அடிமைத்தளையில் இருந்து விடுதலை பெற நம் அன்னை வீறுகொண்டு எழுந்து பரங்கியரைத் தன் வலதுகையால் அவர்கள் தலையில் தாக்கும்போது, அவளுடைய இடதுகை எதிரியைத் தாக்காமல், அவள் தலையையே தாக்கியதைப் பற்றியும் கூறுவீர். அந்த அடியினால் அவள் ஐம்பது ஆண்டு காலம் துவண்டு போனதைப் பற்றியும் கூறுவீர்.
ஐம்பது ஆண்டு காலம் ஆகிவிட்டது. ஆனால் 1857ம் ஆண்டு நீங்கள் துவங்கிய அந்த சுதந்திர வேட்கை இன்னும் தீரவில்லை. அதன் வைர விழா கொண்டாட்டங்களின்போது உங்களுடைய கனவுகள் நிறைவேறும் என்று நாங்கள் உறுதியளிக்கிறோம். நாங்கள் உங்கள் குரலைக் கேட்கிறோம். அதன்மூலம் எங்களுக்கு உத்வேகம் கிடைக்கின்றது. மிகக் குறைந்த உதவிகளைக்கொண்டு நீங்கள் போரை நடத்தினீர்கள். அந்தப் போர் வெறும் ஏகாதிபத்தியத்துக்கு எதிரானது மட்டுமல்ல, அது துரோகத்திற்கும் எதிரான போர். துவாப்பும் அயோத்யாவும் இணைந்து நின்று போர் புரிந்தது பிரிட்டிஷ் அதிகாரத்திற்கு எதிராக மட்டுமல்ல, ஏனைய இந்தியாவிற்கும் எதிராகத்தான். கடினமான அந்தப் போரை நீங்கள் மூன்றாண்டுகளுக்குத் தொடர்ந்தீர்கள். அந்நிய சக்திக்கு எதிரான அந்தப் போரில் கிட்டத்தட்ட வெற்றியும் பெற்றீர்கள். இது எப்பேர்ப்பட்ட உற்சாகத்தைத் தரக்கூடியது. துவாப்பும் அயோத்யாவும் ஒரு மாதத்தில் சாதித்ததை இந்துஸ்தானம் முழுவதும் உறுதிப்பாட்டோடு இணைந்தால் ஒரே நாளில் சாதித்து விடலாம். இது எங்களுக்கு வெற்றி நிச்சயம் என்ற நம்பிக்கையை கொடுக்கின்றது. அதனால் உங்களுடைய போராட்டத்தின் வைர விழ 1917ம் ஆண்டு நடக்கும்பொழுது இந்திய ஒரு சுதந்திர நாடாக இந்த உலகில் அடியெடுத்து வைக்கும் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது.
ராணி லக்ஷ்மி பாயின் ரத்தமும் பஹதூர் ஷாவின் எலும்புகளும் அவர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்குப் பழி வாங்கவேண்டி காத்திருகின்றன. புரட்சிப் போராட்டத்தைப் பற்றிய தகவல்களைக் கூற மறுத்ததனால் மரண தண்டனை விதிக்கப்பட்ட பாட்னாவைச் சேர்ந்த போராளி பீர் அலி பரங்கியரின் காதில் படும்படி கூறிய வார்த்தைகள் நினைவில் நிறுத்தப்பட வேண்டியவை. ‘நீங்கள் என்னை இன்று தூக்கில் இடலாம். என்னைப் போன்ற பலரையும் நீங்கள் தூக்கில் இடலாம். ஆனால் என்னுடைய இடத்தில் பல ஆயிரம் பேர் வருவார்கள். உங்கள் எண்ணம் ஈடேறாது.’
இந்தியர்களே, இந்த வாக்கியம் நிறைவேற்றப்பட வேண்டும். தியாகிகளே, நீங்கள் சிந்திய ரத்தத்திற்கு நாங்கள் பழி வாங்குவோம்.
வந்தே மாதரம்.