Posted on Leave a comment

மகாத்மா காந்தி கொலை வழக்கு – சாவர்க்கரின் வாக்குமூலம் (பகுதி 2) | தமிழில்: ஜனனி ரமேஷ்

(a) அக்ரணி அல்லது இந்து ராஷ்டிரம்
இந்தியாவிலுள்ள
ஏனைய இந்து சங்கடன தலைவர்களைப் போலவே நானும் இந்தியாவிலுள்ள எல்லா மாகாணங்களிலும் புதிய
மகாசபா தினசரிகளைத் தொடங்கும் அனைத்து முயற்சிகளுக்கும் ஊக்கமும் உதவியும் அளிக்க முயன்று
வருகிறேன். அதேபோல் இந்து சித்தாந்தத்தைப் பரப்ப ஆப்தேவும், கோட்சேவும் மராத்தி தினசரியைத்
தொடங்க நீண்ட காலமாகவே முனைந்ததுடன், இது தொடர்பாக எனது தார்மீக ஆதரவையும், நிதி உதவியையும்
வலியுறுத்தி வந்தனர். பத்திரிகை தொடங்குவதற்குத் தேவையான தார்மீக ஆதரவையும், நிதி உதவியையும்,
முன்னணி மற்றும் பொறுப்புள்ள இந்து
த் தலைவர்களிடமிருந்து அவர்கள் பெற்றது தெரிய வந்தவுடன், மூன்று நிபந்தனைகளின்
அடிப்படையில் நானும் ரூ 15,000/- அளிக்க ஒப்புக்கொண்டேன்.
முதலாவதாக இந்த
முன்பணம் கடனாகத் தரப்படுவதால், ஆப்தே மற்றும் கோட்சே இருவரும் கூட்டாக உறுதிப் பத்திரம்
(Promissory Note) எழுதித் தர வேண்டும்; இரண்டாவதாக நிறுவனம் பதிவு செய்யப்பட்ட நிறுவனமாகப்
(Limited Company) பதிவு செய்யப்பட வேண்டும்; மூன்றாவதாக நான் கொடுத்த கடன் அந்நிறுவனத்தில்
பங்குத் தொகையாக மாற்றப்பட வேண்டும். இதனைத் தொடர்ந்து இருவருமே கூட்டாகக் கடன் பத்திரத்தை
எழுதிக் கையெழுத்திட்டுத் தந்தனர். ‘இந்து ராஷ்ட்ர ப்ரகாஷன் லிமிடெட்
என்ற பெயரில் லிமிடெட் நிறுவனமாகப் பதிவு
செய்ததுடன் எனது கடனும் பங்குத் தொகையாக மாற்றப்பட்டது.
பிரபல மற்றும்
வசதியான இந்துத் தலைவர்கள் ரூ 5000 முதல் ரூ 10000 வரை அளித்துள்ளது பதிவாகி உள்ளது.
சேத் குலாப் சந்த் ஹீரா சந்த் (சிந்தியா ஸ்டீம் நேவிகேஷன் நிறுவனத்தின் சேத் வால்சந்த்
ஹீராசந்த் சகோதரர்), போர் (Bhor) மாகாண முன்னாள் அமைச்சர் ஷிங்க்ரே, சங்க்லி மில் உரிமையாளரும்
கோடீஸ்வரருமான விஷ்ணு பந்து வேலாங்கர், கோலாபூர் சினிமா பிரபலம் ஸ்ரீமான் பால்ஜி பெண்டார்கர்,
போர் (Bhor) மன்னர் ‘நகர் பூஷன்
என்ற பட்டமளித்துக்
கௌரவப்படுத்திய தோப்தே, ஸ்ரீமான் சந்திரசேகர் அகாஷே, பாராமதி ராவ் பகாதூர் ஷெம்பேகர்,
ஸ்ரீமான் சேத் ஜுகல்கிஷோர் பிர்லா (கோட்சே கடிதம் ஜி-74 டி.29 பார்க்கவும்) உள்ளிட்ட
பலர் நிறுவனத்தின் மூலதனப் பங்குகளுக்குக் கணிசமான தொகையை அல்லது இந்து ராஷ்ட்ரத்த்துக்கு
நன்கொடையை வழங்கி இருக்கின்றனர்.
மேற்கூறிய பத்தியில்
காணப்படும் விவரங்கள் அனைத்தும் ப்ராக்ஷிக்யூஷன் தரப்பு சாட்சியில் உள்ளன (P.W. 57,
பக்கங்கள் 233, 234, 243, 254; பி P.W. 60, பக்கம் 320; P.W. 86, பக்கம் 420 மற்றும்
கோட்சே & ஆப்தே கடிதங்கள் பக்.277–பக்.293). அக்ரணி பத்திரிகைக்கு மட்டுமின்றி
,
விக்ரம் மற்றும் ஃப்ரீ இந்துஸ்தான் உள்ளிட்ட பல்வேறு பத்திரிகைகளுக்குத்
தார்மீக ஆதரவையும், நிதி உதவியையும், இயக்கத்தின் தலைவர் என்ற முறையில் நான் வழங்கி
வருவதாக கோட்சேவே ஒப்புக் கொண்டுள்ளார் (G.-70 பக்கம் 293 பார்க்கவும்).
மேற்கண்ட விவரங்களிலிருந்து
அக்ரணி பத்திரிகைக்கு நான் உதவியதற்குக் காரணம் அது ஆப்தே – கோட்சே நிறுவனம் என்பதால்
அல்ல என்றும், மகாசபா கட்சி பத்திரிகை என்பதால்தான் என்றும், அதற்கு நான் மட்டுமின்றி
இந்து சங்கடனிஸ்ட் இயக்கத்தைச் சேர்ந்த பொறுப்புள்ள கௌரவமிக்கத் தலைவர்களும் உதவி உள்ளனர்
என்பதும் தெளிவு.
(b)
அக்ரணி கொள்கை முழுவதும் கோட்சே மற்றும் ஆப்தேவின் கட்டுப்பா
ட்டில்
அக்ரணி பத்திரிகையை
கோட்சேவும், ஆப்தேவும் சொந்தப் பத்திரிகையாக ஆரம்பித்ததைத் தொடர்ந்து பத்திரிகையின்
கொள்கை முழுவதும் அவர்கள் கட்டுப்பாட்டில்தான் இருந்தது. இருப்பினும் பரவலாகப் பிரபலமடைவதற்காகப்
பத்திரிகையின் முதன்மை ஆசிரியராக அல்லது நிறுவனராக அல்லது ஆதரவாளராக நான் இணைய வேண்டுமெனத்
தொடர்ந்து அழுத்தம் கொடுத்தபோதும் நான் உடன்படவில்லை. எனது தலைமையில் உருவான இந்து
மகாசபாவின், ‘சாவர்க்கர்–வாதம்
என்று அவர்களால்
அழைக்கப்படும் எண்ணங்களின் பிரதிநிதியாகவும், அதன் சார்பில் இந்தியா முழுவதும் பிரசாரம்
மேற்கொள்ளும் எல்லாப் பத்திரிகைகளுக்கும் பொதுவான நலம் விரும்பியாகவும், ஆதரவாளராகவும்
மட்டுமே இருப்பேன் என்று அவர்களிடம் தெளிவுபடுத்தினேன். இந்தப் பத்திரிகையைப் பொருத்தவரையிலும்கூட
இந்த அடிப்படையில்தான் ஆதரவளிப்பேன் என்று சொன்னேன்.
அக்ரணி
தினசரியில் எனது நிழற்படம்
இருப்பினும்
இந்து மகாசபையின் தலைவர் என்ற முறையில் எனது நிழற்படத்தை அவர்களது தினசரியின் முதல்
பக்கத்தில் வெளியிட ஆப்தேவும், கோட்சேவும் தன்னிச்சையாக முடிவெடுத்தனர். இந்தியாவின்
பல்வேறு மாகாணங்களைச் சேர்ந்த பல இந்து-எண்ணம் கொண்ட தினசரிகளும் அவற்றின் முதல் பக்கங்களில்
எனது நிழற்படத்தை வெளியிட்டு வருகின்றன. எனவே இதில் ஆட்சேபகரமான விஷயம் ஏதும் இருப்பதாக
நான் கருதவில்லை. ஆனால் ப்ராசிக்யூஷன் தரப்பு அவரது தொடக்க உரையில் எனக்கும் அந்தத்
தினசரியின் கொள்கைக்கும் ஏதோ நேரடித் தொடர்பு இருப்பதுபோல் இதை முக்கிய விஷயமாகக் குறிப்பிட்டுள்ளார்.
தினசரிகளின் ஒவ்வொரு இதழின் முதல் பக்கத்திலும் இதுபோல் நிழற்படங்களை வெளியிடுவது இந்தியாவில்
சாதாரண விஷயம். மகாத்மா காந்தி பிரபலமாக இருந்த காரணத்தால் அவரது நிழற்படத்தை தினசரிகள்
முதல் பக்கத்தில் வெளியிட்டன. ஆனால் இந்த தினசரிகள் குறித்த எந்த விவரமும் காந்திக்குத்
தெரியாது. அவற்றைப் படித்ததும் இல்லை. பூனாவைச் சேர்ந்த ‘கேசரி
பத்திரிகையின் முதல் பக்கத்தில் லோகமான்ய
திலகருடைய நிழற்படம் நிரந்தரமாகவே இடம் பெறும். ஆனால் இதைச் சுட்டிக்காட்டி நல்ல மனநிலையிலுள்ள
யாரும் எந்தவொரு நீதிமன்றத்திலும் மறைந்த லோமான்ய திலகருக்கும், இன்றைய கேசரியின் பத்திரிகையின்
கொள்கைக்கும் தொடர்பு இருக்கிறது என்று சொல்ல மாட்டார். சட்டப்படியும், நியாயப்படியும்,
தலைவர்களின் நிழற்படங்களை வெளியிட்ட பத்திரிகை ஆசிரியர்தான் பொறுப்பே தவிர, ஆசிரியரின்
கொள்கைகளுக்கு நிழற்படத்தில் இருப்பவர் பொறுப்பாக மாட்டார்.
இன்னுமொரு நம்பத்தகுந்த
ஆதாரமாக, அக்ரணியின் நிர்வாகத்தோடும், கொள்கையோடும் (இந்து ராஷ்டிரம்) என்னை அடையாளப்படுத்திக்
கொள்ளும் பொறுப்பைத் தனிப்பட்ட முறையில் நான் ஒப்புக் கொள்ளவில்லை என்பதற்கான ஆவணத்தைப்
ப்ராசிக்யூஷன் தரப்பே அளித்துள்ளது. கோட்சேவுக்கும், ஆப்தேவுக்கும் கூட்டாக நான் எழுதிய
கடிதத்தை அவர்கள் சமர்ப்பித்துள்ளனர் (SGA-# Exhibit பக்கம் 302 பார்க்கவும்).
கடிதத்தை நான்
எழுதியதற்கான சூழல் இதுதான். ஒரு வருடத்துக்குப் பிறகு ஆப்தேவும், கோட்சேவும் தினசரியைத்
தொடங்கி அதற்கான அச்சகத்தையும் முடிவு செய்தனர். பிறகு என்னைச் சந்தித்துப் பத்திரிகையின்
கொள்கையுடன் அடையாளப்படுத்திக் கொள்ளுமாறு மீண்டும் வலியுறுத்தினர். ஒப்பந்தத்தில்
என் பெயரை எழுத அனுமதிக்குமாறு அல்லது நிறுவனராக அல்லது புரவலராக இருக்க ஒப்புக் கொண்டால்,
அச்சகத்தை நல்ல விலையில், எளிதாக வாங்க முடியும் என்றும் வேண்டினர். அவர்கள் சொன்ன
காரணங்களுக்காகவே நான் சம்மதிக்கவில்லை. அவர்கள் சென்ற பிறகு சரியாகப் புரிந்து கொள்ளாமலோ,
வேறெந்த காரணத்தினாலோ, எனது பெயர் தவறாகப் பயன்படுத்தப்பட்டு விடக்கூடாது என்பதால்,
தினசரியின் கொள்கை அவர்களுக்கு மட்டுமே சொந்தம் என்பதையும் குறிப்பிட்டு ஒரு கடிதம்
எழுதுவது நல்லது என்று நினைத்தேன். இதனைத் தொடர்ந்த உரையாடலின்போது ஏதேனும் குழப்பம்
ஏற்பட்டுச் சொல்ல வந்தது மறந்து போகாமல் இருக்க இந்த விஷயத்தை எழுத்தில் தெளிவுபடுத்தச்
சொன்னேன். அதாவது அக்ரணியின் கொள்கை உங்கள் இருவருக்கு (கோட்சே மற்றும் ஆப்தே) மட்டுமே
சொந்தமாகவும், பிரத்யேகமாகவும், நிபந்தனையற்றும் இருப்பதை ஒப்பந்தத்தில் எழுத்து மூலம்
பதிவு செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டேன்.
(c)
‘அக்ரணி
யில் நான் எழுதவே இல்லை
ஆப்தேவும்,
கோட்சேவும் அக்ரணியின் முதல் இதழ் முதற்கொண்டே சிறு குறிப்பையேனும் எழுத வேண்டும் என்று
அழுத்தம் கொடுத்து வந்தனர். எனது கட்டுரைகளைச் சிறப்புத் தலையங்கப் பத்திகளில் வெளியிடுவதாகவும்
கூறினர் (கோட்சேவின் கடிதம் G-61 தேதி 10 மார்ச் 1944 பக்கம் 291 பார்க்கவும்). ஆனால்
அக்ரணி பத்திரிகைக்காக நான் எதுவுமே பிரத்யேகமாக எழுதவும் இயலவில்லை, எழுதவும் இல்லை.
இந்தியா மற்றும் வெளிநாடுகளிலுள்ள கட்சித் தொடர்பற்ற நூற்றுக்கணக்கான பத்திரிகைகள்
எதையேனும் எழுதித் தருமாறு என்னைத் தொடர்ந்து வேண்டி வந்துள்ளன. ஒரு சிலவற்றுக்கு மட்டும்
எழுதி, மற்றவைகளுக்கு எழுதாமல் இருந்திருந்தால் நான் நடுநிலை தவறியவனாகி இருப்பேன்.
இந்து சங்கடன இயக்கப் பணிகள் அதிகமிருந்த காரணத்தாலும், அதற்காகத் தனிப்பட்ட முறையில்
எழுதுவதற்கும் ஏராளம் இருந்ததாலும், வேறு எந்தப் பத்திரிகைக்கும் எழுதுவதில்லை என்பதைக்
கொள்கையாக வைத்துக்கொண்டு மறுத்து வந்தேன். எனது அறிக்கைகளும், கட்டுரைகளும், பொதுவான
பத்திரிகைச் செய்திகளாகப் பத்திரிகை முகவர்களால் அதிக எண்ணிக்கையில் வெளியாகிக் கொண்டிருந்ததால்,
தனியாக எந்தப் பத்திரிகைக்கும் பிரத்யேகமாக எழுத வேண்டிய அவசியமில்லாமல் போய்விட்டது.
அந்த வகையில் அக்ரணி நான் கையொப்பமிட்டு வெளியிட்ட பத்திரிகைச் செய்திகளையும், குறிப்புகளையும்,
சிறப்பு அறிக்கைகளையும் வெளியிட்டு வந்துள்ளது. இவற்றைத் தவிர அக்ரணிக்காக நான் தனியாக
வேறெதையும் எழுதவில்லை. இதற்காக நான் வருத்தப்பட்டேன் என்றாலும் அக்ரணி பத்திரிகையை
விதிவிலக்காகக் கருத முடியவில்லை. இதற்காகச் சில நேரங்களில் ஆப்தேவும், கோட்சேவும்
என் மீது வருத்தப்பட்டார்கள். இது சந்தேகத்துக்கு இடமின்றி, மறுக்க முடியாத உண்மை என்பதை
கோட்சேவும், ஆப்தேவும் எனக்கு எழுதிய கடிதங்களை ப்ராசிக்யூஷன் தரப்புச் சாட்சிகளாகச்
சமர்ப்பித்ததிலிருந்து தெரிந்து கொள்ளலாம். இவற்றிலிருந்து ஒன்றே ஒன்றை மட்டும் நான்
குறிப்பிட விரும்புகிறேன். ப்ராசிக்யூஷன் தரப்பு மொழிபெயர்ப்பு கீழ்க்கண்டவாறு:-
G-70 என்று
குறிப்பிடப்பட்டுள்ள கோட்சேவின் கடிதம் (Exhibit பக்கம் 293) கூறுவதாவது:
‘அக்ரணி தினசரி பத்திரிகைக்கு நீங்கள் எந்தப்
பிணையையும் பெறாமல் வெறும் கடன் உறுதிச் சீட்டின் (promissory note) அடிப்படையில் மிகப்
பெரிய தொகையாக ரூபாய் பதினைந்தாயிரம் அளித்திருக்கிறீர்கள்.
‘இம்மாதம் 25ம் தேதி, அதாவது இன்றிலிருந்து
25 நாள்கள் கழித்து ‘அக்ரணி
தினசரி இரண்டு
ஆண்டுகளை நிறைவு செய்ய உள்ளது. அச்சகத்துக்காக வசதியான சில ஆதரவாளர்களிடமிருந்து மூலதனத்தைப்
பெற்றுள்ளோம்
.
‘அக்ரணி குறித்த நிதி நிலவரத்தை
உங்களுக்கு (சாவர்க்கர்) கூறியபோது உங்களுக்குக் கொடுத்த கடன் உறுதிச் சீட்டை (promissory
note) நாங்கள் கிழித்துப் போடச் சொன்னோம் என்று தவறாகப் புரிந்து கொண்டிருப்பது தெரிய
வந்தது…
‘கடந்த திங்கள் கிழமை ஸ்ரீமான்
குலாப் சந்த் இங்கே வந்திருந்தார். அவருடன் நாங்கள் பேசினோம். ஒரு மாத காலத்துக்கு
ரூபாய் ஐந்தாயிரம் அனுப்பியிருந்தார்…
‘கணிசமான நிதி அக்ரணி தினசரிக்கு
வழங்கியது எனக்கு நினைவிருக்கிறது என்றாலும் ‘விக்ரம்

மற்றும் ‘ஃப்ரீ இந்துஸ்தான்
பத்திரிகைகளுக்கும்
உங்கள் உதவி தேவைப்படுவதால், உங்கள் கவனத்துக்குக் கீழ்க்காணும் விவரங்களைக் கொண்டு
வர விரும்புகிறேன்.
‘இந்தப் பத்திரிகையில் நீங்கள்
கூடுதலாக ரூபாய் பத்தாயிரம் முதலீடு செய்வதுடன் ஒட்டுமொத்தத் தொகைக்கு அதாவது ரூபாய்
இருபத்தைந்து ஆயிரம் மீது ஆண்டுக்கு மூன்று சதவிகிதம் வட்டி வசூலிக்க வேண்டும் என்பதும்
எனது கருத்தாகும்
.
‘இப்போது நான் இந்த தினசரியின்
மற்றொரு பாகம் (அம்சம்) பற்றி எழுதுகிறேன். காந்திஜியின் ‘ஹரிஜன்
பத்திரிகை மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.
அந்தப் பத்திரிகையில் பல்வேறு தலைப்புகளில் குறைந்தபட்சம் பத்து பத்திகளுக்கு காந்தியின்
சொந்தப் பெயரில் கட்டுரைகள் இடம் பெறுகின்றன. ஆனால் ‘அக்ரணி
பத்திரிகைக்கு உங்கள் (சாவர்க்கர்) எழுத்து
மூலம் சின்னஞ்சிறு பலன்
(பெருமை) கூட கிடைக்கவில்லை. ‘கேசரி
பத்திரிகைக்கு (லோகமான்ய) திலகர் மூலம் அதாவது அவரது எழுத்துக்கள் மூலம் நேரடிப் பலன்
கிடைத்தது. ‘ஹரிஜன்
பத்திரிகையில்
காந்தியே (கட்டுரைகள்) எழுதுகிறார்…

‘இப்போது இருப்பதை விடவும் உங்கள்
உடல் ஆரோக்கியம் தேறிய பிறகு ஒவ்வொரு வாரமும் குறைந்தபட்சம் ஒரேயொரு கட்டுரையேனும்,
அரசியல் அல்லது இந்து மதம் பற்றி மட்டுமின்றி
, புரட்சி, எந்திரமயமாக்கல், இயற்பியல், நுண்ணறிவு, இலக்கியம், வரலாறு, தத்துவம்,
கவிதை என பல்வேறு தலைப்புகளில் எழுதுங்கள். இரு
கைகளையும் கூப்பி உங்களைத் தாழ்மையுடன் தொடர்ந்து வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன்
.
‘எழுத்துக்கான சன்மானம் குறித்து
உங்களிடம் (சாவர்க்கர்) பேசுவது நாகரிகமாக இருக்காது. ‘அக்ரணி
பத்திரிகைக்குப் பல்வேறு தலைப்புகளில்
தொடர்ந்து எழுதத் தொடங்கிய பிறகு ‘அக்ரணி

மூலம் கிடைக்கும் லாபத்தில் ஒரு பங்கை உங்கள் மீதுள்ள மரியாதைக்காகவும், பக்திக்காகவும்
தரச் சித்தமாக இருக்கிறோம். உங்களுக்கு (சாவர்க்கர்) மாதம் ரூபாய் நூறு அனுப்பி வைக்கிறோம்
.
எனது எழுத்துக்கான
சன்மானம் தொடர்பாகப் பணம் கொடுக்கும் யோசனை நேர்மையாக ஆனால் வேடிக்கையாக இருந்தாலும்,
அக்ரணி பத்திரிகைக்கு நான் எழுதவுமில்லை, ஏற்கெனவே பட்டியலிட்ட காரணங்களுக்காக மேற்கொண்டு
பண உதவி செய்யவுமில்லை என்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லை.
(d)
கோட்சேவும், ஆப்தேவும் என்னுடன் பயணித்தனர்
என்னுடனான சுற்றுப்
பயணங்களில் குழுவினருடன் கோட்சேவும், சில தருணங்களில் ஆப்தேவும் பங்கேற்றனர் எனறு ப்ராசிக்யூஷன்
தரப்பு தெரிவித்துள்ளது. ப்ராசிக்யூஷன் தரப்பு சாட்சிப்படுத்தி உள்ள கோட்சே எனக்கு
எழுதிய பதினேழு கடிதங்களுள், கோட்சே என்னுடன் பயணிக்க விரும்பினார் மற்றும் பயணித்தார்
என்பதை நிரூபிக்க மட்டுமே நீதிமன்றத்தில் குறைந்தபட்சம் பத்துக் கடிதங்களை சமர்ப்பித்துள்ளது.
நான் எப்போது பயணித்தாலும் ஒவ்வொரு இடத்திலும் பிரபலத் தலைவர்களும், ஏராளமான ஊழியர்களும்
என் குழுவுடன் இணைந்து பயணிப்பார்கள். குழுவின் அளவும் எண்ணிக்கையும் சில நேரங்களில்
அதிகமாகும்போது எனது பயணத்துக்காகச் சிறப்பு ரயில் பெட்டிகள் பதிவு செய்யப்படும். கடந்த
எட்டு ஆண்டுகளில் இதுபோல் நூற்றுக்கணக்கில் நீண்ட பயணங்களை மேற்கொண்டு இந்தியா முழுவதும்
பல்வேறு நகரங்களுக்கும், கிராமங்களுக்கும் சென்று ஆயிரக்கணக்கான கூட்டங்களில் பேசியுள்ளேன்.
இவற்றுள் அதிகபட்சம் பத்து அல்லது பன்னிரண்டு பயணங்களில் மட்டுமே கோட்சேவும், ஆப்தேவும்
என்னுடன் வந்திருப்பார்கள். பண்டிட் நாதுராம் என்னுடைய பயணக் குழுவில் அவராகவே விருப்பப்பட்டு
இணைந்தார் என்பதையும், தொடர்ந்து அவர் முன்வைத்த பல அழுத்தமான கோரிக்கைகளுக்குப் பின்னரே
அனுமதிக்கப்பட்டார் என்பதையும், சில தருணங்களில் ஆர்வமுள்ள மற்ற தன்னார்வத் தொண்டர்களுக்குச்
சம அளவு வாய்ப்பளிக்க வேண்டியிருப்பதால் கோட்சே வேண்டுகோள் நிராகரிக்கப்பட்டதையும்
நிரூபிக்க ப்ராக்சியூஷன் தரப்பு சமர்ப்பித்துள்ள கடிதங்களே ஆதாரம். மேற்கூறியவை அனைத்தும்
உண்மை என்பதை நிரூபிக்க கோட்சேவின் கடிதங்களிலிருந்து சில பத்திகளைக் கீழே தர வேண்டியது
அவசியமாகிறது. ப்ராசிக்யூஷன் தரப்பே இக்கடிதங்களைப் பின்வருமாறு மொழிபெயர்த்துள்ளது:
1941 நவம்பர்
10 (G-26 Exhibit
பக்கம் 278) கடிதத்தில்
கோட்சே எழுதியதாவது:
“அஸ்ஸாம் பயணத்தில் கலந்துகொள்ள
நான் எப்போது பம்பாய்க்கு வரவேண்டும் என்பதையும் உங்கள் (சாவர்க்கர்) பயணத் தேதியையும்,
ரயில் விவரங்களையும் எனக்குக் கடிதம் மூலம் முன்கூட்டியே தயவுசெய்து தெரிவியுங்கள்.
உங்களுடன் (சாவர்க்கர்) பயணிக்கும்போது உங்கள் மூலம் இந்து சபா குறித்த அனுபவத்தையும்,
கல்வி அறிவையும் பெற மராட்டியத்திலுள்ள பல நல்ல ஊழியர்கள் ஆர்வமுடன் இருக்கின்றனர்…
நேற்று
சதாரா பாரிஸ்டர் விதால் ராவ் கரந்திகர் இது குறித்த தனது ஆர்வத்தை என்னிடம் கூறியதுடன்,
அவரது விருப்பத்தைக் கடிதம் வாயிலாக உங்களுக்கு (சாவர்க்கர்) தெரிவிக்கவும் பணித்தார்.
இந்தப் பயணத்தின்போது தனது செலவுகளைத் தானே பார்த்துக்கொள்ளவும் தயாராக இருக்கிறார்…
உங்களுடன் (சாவர்க்கர்) பதினைந்து நாள்கள் செலவிட ஆசைப்படுவதாகவும், அதற்கான அவரது
பயணச் செலவுகளை அவரே ஏற்றுக் கொள்ளவும் தயாராக உள்ளதாகக் கூறியிருக்கிறார். எனவே உங்கள்
பயணத்தின்போது அவரை இணைத்துக் கொள்ள உங்கள் சம்மதத்தைத் தர வேண்டும் என்பது என் எண்ணம்…
1942 ஆகஸ்ட்
21 கோட்சே எழுதிய கடிதத்தில் G-38 (Exhibit பக்கம் 281) உள்ளவை பின்வருமாறு:
“…29ஆம் தேதி நடைபெற இருக்கும்
செயற்குழுக் கூட்டம் மிக முக்கியமானதாக இருக்குமென எண்ணுகிறேன். …இந்தக் கூட்டத்துக்கு
நீங்கள் (சாவர்க்கர்) மற்றவர்களையும் (உறுப்பினர் அல்லாதவர்களையும்) அழைத்துள்ளீர்கள்.
எனவே இந்தக் கூட்டத்துக்கு நான் வருவதில் உங்களுக்கு ஏதும் ஆட்சேபணை இல்லை எனில், உங்களுடன்
வரவிருப்போருடன் என்னையும் இணைத்துக் கொள்ளச் சாத்தியப்படால் எனக்கும் மகிழ்ச்சியே.
1942 ஆகஸ்ட்
24 கோட்சே எழுதிய கடிதத்தில் G-39 (Exhibit பக்கம் 282) உள்ளவை பின்வருமாறு:
“தில்லி அமர்வு மிக முக்கியமானது
என்பதால் தலைவர் (சாவர்க்கர்) குழுவின் உறுப்பினராக என்னையும் உடன் அழைத்துச் செல்வது
குறித்துப் பரிசீலிக்கவும்.
கோட்சே எழுதிய
கடிதத்தில் G 43 (Exhibit பக்கம் 284) பின்வருமாறு குறிப்பிடுகிறார்:
“கான்பூரில் நீங்கள் தலைமை ஏற்கும்
கூட்டத்துக்கு உங்களுக்கு முன்பாகவே நான் சென்று இந்து
ப்
பிரசாரத்தை மேற்கொள்ள விரும்புகிறேன். ஆனால் மற்றவர்கள் அவர்களை அனுப்ப
உங்களுக்கு அழுத்தம் கொடுத்து வருவதை நான் அறிவேன். இதன் காரணமாக எனது பெயரை நீங்கள்
நீக்க வாய்ப்புள்ளது. எனவே ஐக்கிய மாகாணங்களில் சுற்றுப்பயணம் செய்ய என்னை நினைவில்
வைத்துக்கொண்டு அனுப்பி வைக்கவும்.

கோட்சே எழுதிய
கடிதத்தில் (G-45 Exhibit பக்கம் 286) கூறுவதாவது:
“தில்லி செயற்குழுக் கூட்டத்துக்கு
நீங்கள் (சாவர்க்கர்) செல்லும்போது உங்கள் குழுவுடன் நானும் தில்லி வர விரும்புகிறேன்.
ரயிலில் பணியாளரின் டிக்கெட்டிலோ, உங்கள் குழுவிடமுள்ள இரண்டாம் வகுப்பு டிக்கெட்டிலோ
பயணிக்க ஆர்வமாக உள்ளேன்.
எனது செயலாளர்
மற்றுமொரு தருணத்தில் கோட்சேவுக்குப் பின்வருமாறு கடிதம் எழுதினார்:
“தலைவருடன் தில்லி செல்ல விரும்பும்
உங்கள் ஆர்வத்துக்கு நன்றி. ஆனால் ஏற்கெனவே திரு பகவத்தை எங்களுடன் (சாவர்க்கர் குழு)
அழைத்துச் செல்ல முடிவெடுத்ததால் இம்முறை உங்களைத் தொந்தரவு செய்ய விரும்பவில்லை (SG-5
Exhibit பக்கம் 299 பார்க்கவும்).

சில தருணங்களில்
பயணங்களின்போது எங்கள் குழுவினருடன் ஊடகப் பிரதிநிதியாக கோட்சே கலந்துகொண்டு பல்வேறு
பத்திரிகையில் சிறப்பாக விவரித்து எழுதியுள்ளார். இதை ஏனைய பத்திரிகையாளர்களும் செய்துள்ளனர்.
அவர்களுள் ஒருவராகத்தான் கோட்சே இருந்துள்ளார்.



தொடரும்…
Leave a Reply